Mon. Jun 30th, 2025

தெலுங்கில் அடித்து ஆடும் நடிகை மீனாட்சி சவுத்ரி!

By indiamediahouse Jan31,2025
Meenakshi

தமிழில் “கோட்” படம் ஏமாற்றினாலும், “லக்கி பாஸ்கர்”, “சங்கராந்திகி வாஸ்துனம்” என, அடுத்தடுத்து இரண்டு படமும் சூப்பர் ஹிட் அடிக்க தெலுங்கில் அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார் நடிகை மீனாட்சி சவுத்ரி.

நடிகை மீனாட்சியை சமீபத்தில் வந்த லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு முன்னரே கோட் படத்தில் நடித்திருந்தாலும் அதில் அவருக்கு பெரிய ரோல் இல்லை என்றே கூறப்பட்டு வந்தது. எந்த முக்கியத்துவமும் இல்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே தமிழில் “கொலை”, “சிங்கப்பூர் சலூன்” படங்களில் மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். மற்றபடி அம்மணி தெலுங்கில் தான் அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்.Meenakshiவடக்கிலிருந்து வந்த இன்னொரு ஹீரோயின் என்று மீனாட்சியை புறம் தள்ளிவிட முடியாது. அவர் ஒரு தொழில் முறை பல் டாக்டர் மற்றும் சர்ஜன். மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். மாநில அளவிலான பேட்மிட்டன் ப்ளேயர். அது போக மாடலிங் என வலம் வந்தவர், ‘மிஸ் இந்தியா’ போட்டியில் ‘ரன்னர் அப்’ ஆக வந்தார். அதன் பிறகு, ‘மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்’ போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். அங்கிருந்து சினிமாத் துறைக்கு வந்தவர் இந்தி, தெலுங்கு, தமிழில் ஒரு டஜன் படங்களில் நடித்து முடித்து விட்டார்.

ஹரியானாவில் பிறந்து வளர்ந்தவர் மீனாட்சி சவுத்ரி. நம்ம சிம்ரனின் உறவுக்காராரா என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரைப் போலவே நடனத்தில் பட்டையை கிளப்புகிறார். அதே போல், நடிப்பிலும் குறை ஏதும் வைப்பதில்லை. அவரது தந்தை இராணுவத்தில் கலோனல் ஆக இருந்தவர் என்பதால், சிறுவயதில் இருந்தே ஒழுக்கம் தான் முக்கியப் பாடமாக இருந்திருக்கிறது. கல்வி, விளையாட்டு, கலை என அனைத்திலும் மிளிரும் மீனாட்சிக்கு அவர் தந்தை கற்றுக் கொடுத்த ஒழுக்கம் தான் துணையாக இருக்கிறது.

“கோட்” படம் அவரை ஏமாற்றினாலும் “லக்கி பாஸ்கர்”, “சங்கராந்திகி வாஸ்துனம்” என, அடுத்தடுத்து இரண்டு படமும் சூப்பர் ஹிட். தெலுங்கு நடிகர் வெங்கடேஷோட ஜோடி சேர்ந்த படத்தில் அம்மணி போலீசாக வந்ததைப் பார்த்து, மொத்த தெலுங்கு தேசமும், “எங்களை அரெஸ்ட் பண்ணுங்க மேடம்” என்று, வரிசை கட்டி நின்று விட்டார்கள். நாமும் அந்த வரிசையில் சேர்ந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டோம்.

அழகோட திறமையும் சேர்ந்த புத்திசாலி பெண்ணாக இருக்கிறார் நடிகை மீனாக்‌சி. இண்டர்வியூக்களில் அட்டகாசமாக பேசுகிறார். நம்மூர் பெயரை வேற வைத்திருக்கிறார். தமிழிலும் அவருக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *