Tue. Jul 1st, 2025

சீமான் மீதான பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு! 

“சீமான் மீதான நடிகையின் பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது” என்று, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

நடிகை விஜயலட்சுமி – சீமான் விவகாரம் ஓய்ந்தபாடில்லை.

நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதனையடுத்து, “தன் மீதான நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று, சீமான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் தீர்ப்பு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

நீதிமன்ற தீர்ப்பில், “மிரட்டலின் அடிப்படையில், சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றது தெளிவாகிறது” என்று, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

அத்துடன், “பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்றும், அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது” என்றும், நீதிபதி இளந்திரையன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள் அனைத்தும், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிப்படுத்துகிறது” என்றும், சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறி உள்ளது.

மேலும், “சீமான் வற்புறுத்தலினால், ஆறு ஏழு முறை நடிகை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதும்,

விஜயலட்சுமியிடமிருந்து பெருந்தொகை சீமான் பெற்று உள்ளதாகதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது” என்றும், சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

அதே போல், “இந்த வழக்கை ஆராய்ந்த போது, நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை என்றும், குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர் என்றும், அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி, நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்து உள்ளார்” என்றும், உயர் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்து உள்ளது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *