தனது வெப் சீரிஸ் வீடியோக்களை திருடிச் சென்று விட்டதாக கூறி நடிகை சோனா, பெப்ஸி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பிரபல தமிழ் நடிகை சோனா, பல்வேறு தமிழ் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது சினிமா வாய்ப்புகள் பெரிதும் கிடைக்காததால் தானே சொந்த தயாரித்து இயக்க சோனா முடிவு செய்தார். அதன்படி “Smoke” என்ற பெயரில் அவர் வெப் சீரிஸ் தயாரித்து இயக்கினார். இது முடிந்து ஒரு ஆண்டிற்கும் மேலாகிறது. ஆனால், இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த நிலையில், நடிகை சோனா திடீரென சென்னை வடபழனியில் செயல்பட்டு வரும் தென்னிந்திய திரைப்பட சம்மேளன அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் எடுத்த வெப் சீரிஸ் ஹாட்டிஸ்க் திருடப்பட்டு விட்டதாகவும், இதற்கு காரணம் மேலாளர் சங்கர் என்பவரே இதற்கு முழு காரணம் என்று பகிரங்கமாக நடிகை சோனா குற்றம்சாட்டி உள்ளார்.
தனது வெப் சீரிஸ்க்கு பணியாற்றிய கலைஞர்களுக்கு சம்பளத்தை மேலாளர் சங்கர் மூலம் கொடுத்ததாகவும், அதனை அவர் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார். மேலாளர் தன்னை மிரட்டுவதாகவும் பைனான்சியர்கள் கடன் கொடுக்க விடாமல் அவர் தடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
என்னுடைய புராஜக்ட் வீடியோவை எடுத்து வைத்து கொண்டு தரமறுக்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் தினமும் இனிமேல் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட உள்ளேன்” என்று நடிகை சோனா தெரிவித்து உள்ளார்.