“இரவோடு இரவாக விஜயலட்சுமிக்கு சீமான் ரூ. 10 கோடி கொடுத்து விட்டார் என பேச தொடங்கி விடுவார்கள்” என்று, நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டு உள்ளார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு, உச்ச நீதிமன்றம் வரை சென்று உள்ளது. முன்னதாக, “ஊடகத்திற்கு முன் சீமான் சீன் போடாதே” என்று, சீமானுக்கு காட்டமான பதிலை வீடியோ ஒன்றில் நடிகைவிஜயலட்சுமி அளித்திருந்தார். தற்போது அதன் தொடர்ச்சியாக, புதிய வீடியோ ஒன்றை பேசி நடிகை விஜயலட்சுமி வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் பேசி உள்ள நடிகை விஜயலட்சுமி “உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்பது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்க விருப்பட்டேன். தீர்ப்பின் அடிப்படையில் செட்டில்மெண்ட் என்று கூறியுள்ளதால் பலர் பேச தொடங்கி விடுவார்கள். ‘இரவோடு இரவாக விஜயலட்சுமிக்கு சீமான் 10 கோடி ரூபாய் கொடுத்து விட்டார் என பேச தொடங்கி விடுவார்கள்’. ஈழத்தமிழர்கள் மூலம் கிடைத்த பணத்தை என்னிடம் கொட்டுகிறார் என அபாண்டமாக என் மீது பழி சுமத்தி விடுவார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்த போது, காவல் துறை தரப்பில் ஒரு வழக்கறிஞர் எனக்காக வாதாடினார். அப்போது, உச்ச நீதிமன்றத்தில் என் சார்பில் ஏன் யாரும் ஆஜராக வில்லை? சும்மா சும்மா அந்த பெண் வழக்கு தொடரவில்லை, மதுரை செல்வம் வைத்து டார்ச்சர் செய்யப்பட்டது குறித்து புகார்தாரரான என் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால், சீமான் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.
நான் ஏதாவது சீமான் பற்றி பேசினால், பணத்துக்காக பேசுறா.. ஏன் இப்படி பேசுறீங்க? உச்ச நீதிமன்றத்தில் எனக்காக யாரும் போராடவில்லை. இந்த வழக்கில் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கப்போவதில்லை என தெரிந்து தான் கதறி அழுதேன். நான் எந்த போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை. என்னை அசிங்கப்படுத்துறது வேலை நடக்கிறது. அந்த அசிங்கத்தில் இறங்கி போராட அவசியமில்லை.
என்னை மக்கள் புரிந்து கொள்வார்கள். எனக்கு ஆதரவு கொடுத்த பொது மக்கள், ஊடகத்தினருக்கு நன்றி” என்று, நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக வைராகி வருகிறது.