அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களாக விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விடா முயற்சி தீபாவளி தினத்தில் ரிலீஸாகும் என அஜித்தின் மேனஜர் சுரேஷ் சந்திரா, தற்போது தெரிவித்து உள்ளார்.
இதனால், ரசிகர்கள் உற்சாகத்திலும் குஷியில் ஆழ்ந்து உள்ளனர். அஜர்பைஜானில் நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் “விடாமுயற்சி” ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சுப்ரபாத சேவையில் நடிகர் அஜித் ஏழுமலையானை வழிபட்டார்.
பிரபல நடிகர் அஜித், திருப்பதி கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி கும்பிடுவதற்காக திருப்பதி மலைக்கு வந்த நடிகர் அஜித், திருப்பதி மலையில் இரவு தங்கி அதிகாலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின், அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.
இதனிடையே, சுப்ரபாத சேவையில் நடிகர் அஜித் ஏழுமலையானை வழிபட்ட புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.