“அமமுக ஒரு கறிக்கோழி! திண்று கொழுகொழு என இருக்குமே தவிர, குஞ்சு பொறிக்காது” என்று, வைகை செல்வன் டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.
அதிமுக மூத்த தலைவர் செங்ககோட்டையன் பற்றிய காரசார விவாதம் அதிமுகவில் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
அந்த வகையில், செங்ககோட்டையனுக்கு அறிவுரை சொல்லும் வகையில் வைகை செல்வன் முன்னதாக பேசியிருந்தார்.
இதற்கு நேற்றைய தினம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசும் போது, “செங்ககோட்டையனுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவிசயம் இல்லை. அவருக்கும் எல்லாம் தெரியும்” என்று, அதிரடியாக பேசி செங்ககோட்டையனுக்கு ஆதரவாகவும், வைகை செல்வனை மறைமுகமாக தாக்கியும் பேசியிருந்தார்.
இந்த நிலையில், -காஞ்சிபுரத்தில் அதிமுக இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட வைகைச் செல்வன், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து விலக்கி ஜெயலலிதா இருக்கும் வரை, கட்சிக்குள் வரக் கூடாது என ஒதுக்கி வைக்கப்பட்டவர்” என்று, கடுமையாக விமர்சனம் செய்தார்.
அத்துடன், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தந்திரமாக செயல்பட்டு கட்சிக்குத் துணைப் பொதுச் செயலாளராக ஆகி, அதிமுக நிர்வாகிகளை அடக்கி ஆளலாம் என நினைத்த பொழுது அதனை உடைதெறிந்தவர் எடப்பாடி பழனிசாமி” என்றும், பேசினார்.
“டிடிவி தினகரன் கட்சியை விட்டு விலகியதை கோபத்தில் ஏதோதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்றும், அமமுக கட்சி ஒரு கறி கோழி, கொழு கொழுவென்று வளருமே தவிர, குஞ்சு பொறுக்காது” என்றும், மிகவும் காட்டமாக பேசினார்.
மேலும், “அரசியலில் தோற்றுப் போனவருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும், டிடிவி தினகரன் கட்சியை விட்டு விலகிய கோபத்தில் ஏதோதோ பேசுகிறார்” என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசினார். இவ்வாரு இவர் பேசிய பேசு அரசியல் வட்டரத்தில் பெரும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.