Animal pet lovers-க்கு எதிராக நீதிமன்றம் சில அதிரடியான மற்றும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதாவது, மனித உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆக்ரோஷமானமான மற்றும் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்யவோ, விற்கவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்து மத்திய கால்நடைத் துறை கடந்த மார்ச் 12 ஆம் தேதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
இந்த தடை குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய கால்நடைத் துறை இணைச் செயலாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், வெளிநாட்டு நாய்களான பிட் புல், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டஃபோர்டு டெரியர், ராட் வீலர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜெண்டினோ, அமெரிக்கன் புல் டாக், போர்போல், கங்கல், மத்திய ஆசிய ஷெபெர்டு, காகஸியன் ஷெபர்டு, தெற்காசிய ஷெபெர்டு, உல்ஃப் டாக்ஸ் உள்ளிட்ட நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடையை எதிர்த்து பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றங்கள், மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உள்ளன. கர்நாடகா உயர் நீதிமன்றம், இந்த கடிதத்தை ரத்தும் செய்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தடை விதிப்பதற்காக நாய்களை வகைப்படுத்துவது குறித்து பொது மக்களின் கருத்துக்களை மத்திய கால்நடைத் துறை கோரியுள்ளது. ஜூன் 1ம் தேதிக்குள் மக்கள், தங்களை கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும், அதுவரை தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், பொது மக்களிடம் கருத்து கேட்பது சட்டப்படி தவறானது எனவும், நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை அமைத்து தான் கருத்து கேட்கும் நடவடிக்கையை துவங்க வேண்டும் எனவும் கூறி, இந்திய கென்னல் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், கருத்து கேட்கும் நடைமுறை தொடரலாம் எனவும், ஜூன் 14- ஆம் தேதி வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
இதனிடையே, ஆக்ரோஷமான நாய்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் வகையில், நாய்களை வகைப்படுத்துவது தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.