பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்தை ஆடு தலையில் மாட்டி பலியிட்ட விவகாரத்தில் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை போட்டியிட்டு தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவேரிப்பட்டணம் காவல் நிலையத்திற்கு பட்பட்ட பகுதியில், ஆடு தலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை படத்தை மாட்டி, நடு ரோட்டில் வைத்து ஆட்டின் தலையை வெட்டி பலியிட்டனர். இது, இணையத்தில் பெரும் வைரலான நிலையில், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்படிஅண்ணாமலை படத்தை ஆடு தலையில் மாட்டி பலியிட்டது தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இப்படிஅண்ணாமலை படத்தை ஆடு தலையில் மாட்டி பலியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து, “மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக” சென்னை உயர் நீதி மன்றத்தில் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி கிருஷ்ணகுமார், நீதிபதி பி பி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
“இந்த வழக்கில், இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை” என்று, மனுதாரர் வழக்கறிஞர் ஜி எஸ் மணி குற்றச்சாட்டினார்.
அப்போது, “இந்த வழக்கில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்வதாகவும்” அரசு தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ் வாதம் செய்தார்.
பின்னர், காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் முதல் கட்டமாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தங்கதுரை விளக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.