“விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னிடம் கேட்டறிந்தார்” பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன் தொடர்ச்சியாக அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சாதாரண கூலி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும், இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்குகிறோம்” என்றும், கூறினார்.
“பாஜக தலைமையில் குழு அமைத்து பாதிக்கப்பட்டு, மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் கொடுக்க நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
மேலும், “உள்துறை அமைச்சர் அமித்ஷா, நட்டா தொலைபேசி மூலமாக இந்த விவகாரத்தை பேசினர் என்றும், அமித்ஷாவிடம் கேட்க இருப்பது இதில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறோம்” என்றும் தெரிவித்தார்.
அத்துடன், “கடந்த விழுப்புரம் விவகாரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தொடர்பு என பேசினேன். எந்த நடவடிக்கையும் முதல்வர் அப்போது எடுக்கவில்லை. ஒரு நபர் விசாரணை அவசியம் இல்லை. ஆனால், கள்ளச் சாராயம் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், அமைச்சர் முத்துச்சாமி ராஜினமா செய்ய வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.
“இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை அவசியமானது கள்ளச்சாராயத்துடன் திமுக உடன் பின்னி பிணைந்து இருக்கின்றனர். கள்ளச்சாராயம் விற்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஏன் கடந்த காலத்தில் கைது நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும், அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
“டாஸ்மாக் ஒரு புறம், சாராய ஆலை திமுக நிர்வாகிகள் நடத்துகின்றனர் என்றும், நாளை மறுநாள் பாஜக சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றும், சிபிசிஐடி விசாரணை பிரச்னை வருவதற்கு முன்பே எடுத்து இருக்க வேண்டும்” என்றும், கூறினார்.
மேலும், “டாஸ்மாக் ஒவ்வொரு வருடத்திற்கும் 18 சதவீதம் மேல் உயருகிறது என்றும், நாளை ஆயிரம் டாஸ்மாக் கடை மூடுவோம் என அறிவிக்க வேண்டும் என்றும், முதல்வர் தனிப்பட்ட முக்கியத்துவமாக நேரில் வந்து பார்க்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, “மதுவிலக்கு புதிய கொள்கை அவசியம்” என்றும், அண்ணாமலை வலியுறுத்தினார்.