ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா இசையமைப்பாளராக ஆன நிலையில், மகள் படத்தில் அப்பா பாடாதது ஏன்? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
ஹலீதாஷமீம் இயக்கும் “மின்மினி” படத்தில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளர் ஆகிறார். “மின்மினி” படம் குறித்து பேசிய கதீஜா, “ஹலீதா முதலில் என்னை அணுகியபோது இசையமைப்பாளர் ஆக வேண்டாம் என்று தான், நான் நினைத்தேன். ஆனால், என் கணவர், வீட்டில் உள்ளவர்கள் மற்றும் படக்குழு ரொம்ப சப்போர்ட் செய்தனர். இந்த படத்தில் மொத்தம் 4 பாடல்கள். அதில், நானே ஒரு பாடல் பாடி இருக்கிறேன்.
இசையமைப்பாளர் ஆனது குறித்து அப்பா ஏ.ஆர். ரகுமான் சொன்ன விசயம் என்ன வென்றால், “தாத்தா சேகர், அப்பா ரஹ்மான், அத்தைகள் ரெஹைனா, இஷ்ரத், கசின் ஜி.வி.பிரகாஷ், எ.எச்.காஷிப் ஆகியோரைத் தொடர்ந்து எங்கள் குடும்பத்தில் இருந்து நான் இசையமைப்பாளர் ஆகி இருக்கிறேன்.
அவரிடம் பாடல்கள் காண்பித்தேன். அவர் ரொம்பவே வாழ்த்தினார். என் வாழ் நாள் முழுக்க அப்பாவுடன், அவர் பாடல்களுடன் ஒப்பிடுவார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், என் தனித் தன்மையுடன் நான் ஜெயிக்கவே விரும்புகிறேன்.
என் படத்தில் நான் ஏன் அப்பாவை ஏன் பாட வைக்க வில்லை என்றால், அவர் மற்ற இசையமைப்பாளர்களிடம் பாடுவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அது, மகளாக இருந்தாலும் சரி, அதனால், நான் அவரை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நான் இசையமைப்பாளர் ஆனதுக்கு ஜி.வி.பிரகாஷ் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். என் தம்பி, கணவர் உட்பட பலர் பட விழாவுக்கு வந்து என்னை வாழ்த்தினார்கள். என் அம்மாவுக்கும் மகிழ்ச்சியே.
நான் எப்போதும், படத்தின் கதை மற்றும் அந்த படத்தின் ஜானருக்கு ஏற்ப நான் பணியாற்றுவேன். முக்கியமாக, நான் வேற ஒரு படத்துக்கும் இசையமைத்து வருகிறேன். விரைவில் முறைப்படி அந்த படம் பற்றிய அறிவிப்பையும் வெளியீடுவேன்” என்று, ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா பேசினர்.