Sun. Dec 22nd, 2024

கோடிகள் புழங்கும் ஸ்கிராப் பிசினஸ்க்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது எப்படி? கொலைக்கு பணம் கை மாறியதும் எப்படி? என்று பல்வேறு தகவல்கள் குறித்து போலீசாரின் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கோடிகள் புழங்கும் ஸ்கிராப் பிசினஸ்க்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கூடவே, சம்போ செந்திலுக்கு இதில் தொழில் போட்டி இருந்து வந்ததா என்பது குறித்தும் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது, சென்னை புறநகர் பகுதிகளின் முக்கிய பிஸினஸ் ஸ்கிராப் பிஸினஸ் ஒன்றாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு பல நூறு கோடிகள் முழங்கும் இந்த பிசினஸை, யார் கைப்பற்றுவது என்ற போட்டி நிழல் உலக தாதாகளுக்கு மத்தியில் எப்போதும் சண்டை நிலவி வருவது வழக்கமான ஒன்றாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, சோழவரம் நிலம் கைமாறுதல் தொடர்பான கட்ட பஞ்சாயத்து, திருவள்ளூர் பில்டர்ஸ் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகளில் நேரடியாக ஆம்ஸ்ட்ராங், பல்வேறு வகைகளில் ரவுடிகள் மற்றும் நிழல் உலக ராதாக்களோடு பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய பிசினஸாக பார்க்கப்படும் ஸ்கிராப் பிசினஸிலும் ஆம்ஸ்ட்ராங் தரப்பின் தலையீடு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்கிராப் பிசினஸ் கட்டப்பஞ்சாயத்துகளில் தற்போது வரை, சம்பவ இடத்திற்கு செல்லாமல் கட்டப்பஞ்சாயத்துகளை செய்து வந்தவர் சம்போ செந்தில் என்றும், போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

சம்போ செந்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேனாம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த சிடி மணி, காக்க தோப்பு பாலாஜி மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்தில், சம்போ செந்திலுக்கு எதிராக 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லுக் அவுட் நோட்டீஸ் தேனாம்பேட்டை போலீசாரால் பிறப்பிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

சிஐடி நகரில் அவரது மனைவி, சம்போ செந்திலை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், அதன் பிறகு ஓ.எம்.ஆர். பகுதிக்கு சென்றதாகவும் அங்கு இருவருக்குள்ளும் விவாகரத்து ஆனதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகு இருவரும் தலைமறைவாகியுள்ள விவகாரமானது தற்போதைய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

சம்போ செந்தில் மீது லுக் அவுட் நோட்டீஸ் தற்போது வரை இருந்து வரும் நிலையில், போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனரா? என்பது குறித்தும், போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை சம்போ செந்தில் தலைமறைவாக இருந்தாலும், சென்னை புறநகர் பகுதிகளில் நடக்கும் ஸ்கிராப் பிஸினசில் ஆதிக்கம் செலுத்தி வருவதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆற்காடு சுரேஷ் படுகொலை, கட்டப்பஞ்சாயத்து விவகாரம், ஸ்கிராப் பிசினஸ் மோதல் விவகாரம் என பல கோணங்களில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் தற்போது விரிவடைந்து அதன் மூலமாக இந்த படுகொலை நடந்திருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், விசாரணையின் முடிவிலேயே முழு விபரமும் தெரிய வரும்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *