“ஆம்ஸ்ட்ராங் விசயத்தில் திட்டமிட்ட தான் அரசியல் படுகொலை நடத்தப்பட்டுள்ளது” என்று, நடிகர் மன்சூர் அலிகான், பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்டு, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்துகொண்டு பேசினார்.
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்வில் மேடை ஏறி பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்வில் யாரும் என்னை அழைக்காமல் நான் வந்தேன்” என்று, குறிப்பிட்டார்.
அத்துடன், “ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் ஆம்ஸ்ட்ராங்கின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நான் வெட்கி தலை குனிகிறேன்” என்றார்.
“எனக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கு எந்த வழக்கமும், பழக்கமும் இல்லை. திட்டமிட்ட தான் அரசியல் படுகொலை நடத்தப்பட்டுள்ளது” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
மேலும், “பச்சை குழந்தை போல் சிரித்துக் கொண்டிருக்கும் மனிதரை நாம் இழந்து விட்டோம். ஆம்ஸ்ட்ராங் குற்ற பின்னணியில் இருந்திருந்தால், அவரைச் சுற்றி எப்பொழுதும் 40 நபர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். ஆனால், அன்றைக்கு யாரும் இல்லை என்று குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை சம்பவம் உளவுத்துறைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. புல்வாமா தாக்குதலில் 49 பேரை எப்படி திட்டமிட்டு உள்ளே அனுப்பி கொலை செய்தார்களோ? எப்படி ஜெயலலிதாவையும், காந்தியையும் திட்டமிட்டு போட்டு தள்ளினார்களோ அது போன்று ஆம்ஸ்ட்ராங்கையும் போட்டு தள்ளி உள்ளார்கள். நான் அவருடன் பேசி பழகாமல் போனதை நினைத்து வருத்தப்படுகிறேன்.” என்றும், நடிகர் மன்சூர் அலிகான், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.