ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 கொலையாளிகளை கஷ்டடி எடுக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்தி உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூந்தமல்லி கிளை சிறையில் உள்ள பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகிய 5 பேரை செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, 7 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூந்தமல்லி கிளை சிறையில் உள்ள பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகிய ஐந்து நபர்களை போலீஸ் காவலில் எடுக்க எழம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
பொன்னை பாலு, அருள் ஆகியோரை மூன்றாவது முறை போலீஸ் கஷ்டடி எடுக்கவுள்ளனர். மூன்றாவது முறை எடுப்பதற்காக அனுமதி கோரிய நிலையில் மேஜிஸ்ட்ரேட் ஜெகதீசன் அனுமதி வழங்கியுள்ளார். ராமு இரண்டாவது முறையாக போலீஸ் கஷ்டடி எடுக்கவுள்ளனர்.
அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை முதல் முறையாக போலீஸ் கஷ்டடி எடுக்க உள்ளனர். 7 நாட்கள் போலீசார் காவல் கேட்கப்பட்டுள்ள நிலையில் 5 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதனிடையே, பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை போலீசார் 21 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.