புற்றுநோய்க்கு மனைவி உயிரிழந்த அடுத்த நொடியே, துப்பாக்கியால் சுட்டு உள்துறை செயலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
அசாம் மாநிலத்தில் உள்துறை செயலாளராக இருந்து வந்த 44 வயதான சிலாடித்யா செட்டியா என்பவரது மனைவி 40 வயதான அகமோனி பார்பருவா, ஆகிய தம்பதியினருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது வரை இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை.
அதாவது, அசாம் மாநிலத்தில் உள்துறை செயலாளரான சிலாடித்யா செட்டியாவின் மனைவி அகமோனி பார்பருவா, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால், அவர் கடந்த 2 மாதங்களால கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக, அசாம் மாநிலத்தில் உள்துறை செயலாளரான சிலாடித்யா செட்டியா நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்து, தனது மனைவியை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். ஆனாலும், அவரது மனைவி அகமோனி பார்பருவா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விசயத்தை, மருத்துவர்கள் சிலாடித்யா செட்டியாவிடம் தெரிவித்த போது, அவர் அப்படியே உடைந்து போனார். உடனடியாக, அவர் மருத்துவர்களிடம், ‘ஐசியுவில் மனைவி உடல் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
மருத்துவர்களுகம் அதற்கு சம்மதம் சொல்லவே, ஐசியுவில் இருந்து மருத்துவர்கள், நர்சுகள் என அனைவரும் வெளியே வந்தனர். அதன் பிறகு, அடுத்த சிறிது நேரத்தில் ஐசியுவில் இருந்து துப்பாக்கிச் சத்தம் வெளியே கேட்டு உள்ளது.
உடனடியாக, மருத்துவமனை ஊழியர்கள் பதறியடித்தபடியே உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது, சிலாடித்யா செட்டியா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்து உள்ளார்.
தனது மனைவி இறந்த துக்கம் தாங்காமல், அசாம் மாநிலத்தில் உள்துறை செயலாளரான சிலாடித்யா தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹிதேஷ் பாரு கூறுகையில், “துப்பாக்கி சத்தம் கேட்டவுடன், நாங்கள் ஐசியுவுக்கு சென்றோம். அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை” என்று, கூறினார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் பிரிவை சேர்ந்த சிலாடித்யா செட்டியா, ரவுடிகளை ஒடுக்கி குற்றங்களை கட்டுப்படுத்தியதற்காக 2015 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் சிறந்த காவல் அதிகாரிகளுக்கான விருதை வென்றார்.
சிலாடித்யா செட்டியாவின் தாயும், மாமியாரும் நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கணவன்-மனைவி இருவரும் தனியாகவே வசித்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவே அடுத்தடுத்து இப்படியான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.