Sun. Dec 22nd, 2024

12 Divorces in 43 Years: 43 ஆண்டுகளில் 12 முறை விவாகரத்து பெற்ற தம்பதி.. விசித்திரமான சம்பவம்.. வெளியான பகீர் பின்னணி..

இன்றைக்கு விவாகாரத்து மற்றும் மறுமணம் என்பது ஒரு சாதாரண விஷயமாகவே மாறிவிட்டது. இருப்பினும், ஆஸ்திரியாவில் ஒரு தம்பதி 12 முறை விவாகரத்து செய்து மறுமணம் செய்துக் கொண்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரியாவின் வியன்னாவில் ஒரு வயதான தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 43 ஆண்டுகள் ஆகியுள்ளது. இருப்பினும், திருமணம் முடிந்த, அந்த 43 ஆண்டுகளில் 12 முறை விவாகரத்து பெற்று, மீண்டும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். அதாவது, இருவரும் ஒவ்வொரு முறையும் விவாகரத்து பெற்று மறுமணம் செய்துக் கொண்டு, மீண்டும் விவாகரத்து செய்துள்ளனர். மறுமணம் செய்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாகரத்து செய்து, பின்னர் மறுமணம் செய்துக்கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அந்தப் பெண் தன்னுடைய 12 வது விவாகரத்தைப் பெற்றுள்ளார். அப்போதுதான், இவர்கள் எதற்காக இத்தனை முறை விவாகரத்தும், திருமணமும் மாறி மாறி செய்தனர் என்பதற்கான காரணம் அம்பலமானது. அதாவது, கணவனை இழந்து தனியாக வாழும் பெண்களுக்கு உதவும் வகையில், சுமார் 24 லட்சம் ரூபாயை (28,300 டாலர்கள்) உதவித் தொகையாக ஆஸ்திரிய அரசாங்கம் வழங்கி வருகிறது. ஒரு பெண் தனது கணவனை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யும்போது, இந்த பணம் அரசாங்கத்தால் நிதி உதவியாக அந்த பெண்ணுக்கு வழங்கப்படும். விதவைகளை ஆதரிப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதித் திட்டத்தில் உள்ள ஓட்டையைத் தான் தம்பதியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில், அரசாங்கம் கொடுக்கும் பணத்தை பெறுவதற்காக இருவரும் 11 முறை விவாகரத்து பெற்று, பின்னர் மறுமணம் செய்துக்கொண்டனர். மேலும், விவாகரத்து பெற்ற பின்னரும் இருவரும் 40 வருடங்களாக ஒரே வீட்டில் தான் வசித்தும் வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மே 2022 இல் 12 -வது விவாகரத்திற்கு பிறகு, அந்த நிதியுதவியை பெறுவதற்காக பென்ஷன் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனுகியுள்ளார். அப்போது தான் நிறுவனத்திற்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இதையடுத்து விசாரணை செய்த போது, இவர்கள் அரசின் நிதியுதவியை பெறுவதற்காக திட்டமிட்டு செய்த மோசடி என்று தெரியவந்தது.

இதையடுத்து, அரசை ஏமாற்றி, சொத்து சேர்த்ததாக இந்த தம்பதிகள் மீது நிதி மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணத்திற்காக இப்படியெல்லாம் கூட செய்வார்களா? என்று வியக்கும் கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *