Mon. Dec 23rd, 2024

“பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட சம்பள பிரச்னை.. நடிகர் அரவிந்த்சாமி நீதிமன்றத்தில் சொன்னது என்ன?

“பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட சம்பள பாக்கி பிரச்னை தொடர்பாக, “பட தயாரிப்பாளர் முருகன் குமார் தரப்பில் பேச்சு வார்த்தைக்கு தன்னிடம் அணுகி உள்ளதாக” நடிகர் அரவிந்த்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படம் வெளியானது. படத்தில் நடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் படி, “தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 30 லட்சம் ரூபாயை வழங்கவில்லை என்றும், 27 லட்சம் ரூபாய் டி.டி.எஸ். வரி செலுத்தப்படவில்லை என்றும், பட வெளியீட்டுக்காக பெற்ற 35 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தரவில்லை” என்றும் கூறி, படத்தின் தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக, நடிகர் அரவிந்த் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “மொத்தமாக 65 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் நடிகர் அரவிந்த் சாமிக்கு வழங்க வேண்டும் என்றும், 27 லட்சம் ரூபாய் டி.டி.எஸ். வரியை வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டும்” என்றும், கடந்த 2019 ஆம் ஆண்டு அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் படி, மீது தொகையை வழங்காததால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரி நடிகர் அரவிந்த் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “தயாரிப்பாளரின் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்” என்று, பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த சொத்து விவரங்களை காலதாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்ததது. அப்போது, அரவிந்த்சாமி தரப்பில், “சம்பாள பாக்கி பிரச்னையில் தயாரிப்பாளர் பேச்சு வார்த்தைக்கு முன்வந்து உள்ளதால், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *