பாஜக செயற்குழு கூட்டத்தில் 7 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
பாஜக-வின் செயற்குழுவில் கூட்டம் இன்று காலையில் நடைபெற்ற நிலையில், ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கும் சேர்த்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி,
– மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஆனதிற்கும் தமிழகத்தை சார்ந்த எல் முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் வழங்கியதற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.
– கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்.
– முல்லை பெரியாரின் புதிய அணைக்கட்டு முயற்சிக்கும் கேரளா கேரளா அரசு மேகதாது அணை உழைத்த அணைகளில் உள்ளிட்ட அணை விவகாரங்களில் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
– திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
– போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் காவல்துறையின் பாரபட்சத்தை கண்டித்து தீர்மானம்.
– பாராளுமன்றத்தில் அமைக்கபட்ட செங்கோலை அவமானப்படுத்தியவர்களை கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
– ஜாதிய மோதல்களை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு சார்பாக முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு கண்டனம்.