நாம் உணவு சாப்பிடும்போது நமக்கு தெரியாமல் அதிகப்படியான காற்றை விழுங்கி விடுகிறோம். இதனால், வயிறு கனமாகவும், உப்பியது போலவும் இருக்கும். அன்றாட வாழ்க்கையில் நம்மில் பலரும் எதிர்கொள்ளும் செரிமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.
இந்த வயிறு உப்புசத்திற்கு காரணங்கள் இருந்தாலும், நாம் சாப்பிடும் சில பழங்களும் வாயு மற்றும் வயிறு உப்புசத்தை உண்டாக்குமாம். தற்போது இந்த பதிவில் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும் பழங்கள் என்னென்ன, அவற்றை எப்படி சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
முலாம்பழம்: முலாம்பழத்தில் நீர்ச்சத்து அதிகம், அதிகளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஏற்படும். எனவே, முலாம்பழம் சாப்பிடும்போது கருப்பு மிளகு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
தர்பூசணி: தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்புசம் மற்றும் வாய்வு பிரச்சனை வரும். எனவே, தர்பூசணியுடன் பழ மசாலா அல்லது கருப்பு மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
திராட்சை: திராட்சையில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருக்கிறது. இதை அதிகமாக சாப்பிடும்போது வாயு மற்றும் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். எனவே, எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
பீச் பழம்: ஆப்பிள் பழம் மாதிரியே இருக்கும் இந்த பீச் பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருக்கிறது. எனவே, பீச் பழத்துடன் ஏலக்காய், இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு, கிராம்பு சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம்.
பேரிக்காய்: பேரிக்காய் அதிகமாக சாப்பிடும்போது சிலருக்கு வாய்வு, வயிறு உப்புசத்தை உண்டாக்கும். எனவே, பேரிக்காய் சாப்பிடும்போது மிளகாய் தூள் மற்றும் தூள் உப்பு கலவையுடன் சாப்பிடுங்கள்.
வாழைப்பழம்: வாழைப்பழம் ஜீரணமாக சாப்பிடவோம். ஆனால், அதுவே அதிகமாக சாப்பிடும்போது உப்புசத்தை உண்டாக்கும். எனவே, ஒரு நாளைக்கு 2க்கு மேல் சாப்பிட வேண்டாம்.
ஆப்பிள்: ஆப்பிளை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருக்கும் பிரக்டோஸ் ஜீரணமாக லேட் ஆகும். இது புளி ஏப்பம், உப்புசத்தை உண்டாக்கும். எனவே, தினமும் 1 ஆப்பிளுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மாம்பழம்: மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம். எனவே, எப்போது மாம்பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், ஜூஸ் போட்டு குடியுங்கள். ஜூஸில் நார்ச்சத்து இருக்காது. உப்புசம் ஏற்படாது.