குடிபோதையில் சாலையில் புரண்டு கலாட்டா செய்த இளைஞர், போலீஸை காலால் தாக்கி அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்து உள்ள நிலையில், தமிழக பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தான் தமிழ்நாட்டில் தற்போது பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் கள்ளக்சாரயம் வேற எந்தெந்த பகுதிகளில் எல்லாம் விற்கப்பட்டு வருகிறதோ அந்த பகுதிகளில் எல்லாம் போலீசார் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலுக்கு மத்தியில், சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பிரதான சாலையான நூத்தஞ்சேரி ஜோதி நகரில், இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் குடி போதையில் உணவகத்திற்க்கு சென்று உள்ளார். அப்போது, அந்த இளைஞர் உணவகத்தில் அமர்ந்து மேலும் மது அருந்தியகாதவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஆம்லெட் கேட்டு அந்த இளைஞர் அடம் பிடித்து உள்ளார். ஆனால், ஆம்லெட் வர தாமதம் ஆனதால், கோபமடைந்த அந்த இளைஞர், ஆம்லெட் சீக்கிரம் தராத அந்த உணவக ஊழியர்களை அங்கிருந்த சமையல் கரண்டியால் தாக்கி கலாட்டா செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மாடம்பாக்கம் பிரதான சாலையில் உருண்டு புரண்டு கடும் அட்ராசிட்டி செய்த அந்த போதை இளைஞர், சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்து உள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து அங்கு வந்த சேலையூர் காவல் நிலைய இரவு நேர போலீசார், அந்த நபரை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முற்பட்டு உள்ளனர்.
அப்போது, போலீசாரை அந்த போதை இளைஞர் காலால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கூடவே, அந்த இளைஞரை அப்பறப்படுத்த முயன்ற பொது மக்களையும் அவர் காலில் எட்டி உதைத்து உள்ளார். அந்த போதை இளைஞரின் அட்ராசிட்டி வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.