Sun. Dec 22nd, 2024

Chennai Metro Train: நவம்பர் மாதத்தில் 8% குறைந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை.. ஆய்வில் இறங்கும் மெட்ரோ நிர்வாகம்..

நவம்பர் மாதத்தில் 8% குறைந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை..

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், 2024 நவம்பர் மாதத்தில் மட்டும் 83 லட்சத்து 61 ஆயிரத்து 492 பேர் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதே நேரத்தில், இந்த எண்ணிகையானது அக்டோபர் மாதத்தை காட்டிலும் 8% குறைந்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, தினசரி பயணிக்கும் சராசரி பயணிகளின் எண்ணிக்கை அக்டோபரில் 2.93 லட்சத்தில் இருந்து நவம்பரில் 2.78 லட்சமாக குறைந்துள்ளது. இதையடுத்து, பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்களை கண்டறிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒரு மாதம் நடைபெற உள்ள இந்த ஆய்வில் சுமார் 75,000 பேரிடம் கருத்துக் கேட்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயணிகளிடம் வீட்டிற்கோ அல்லது கடைசி ரயில் நிலையத்திற்கோ எப்படிப் பயணம் செய்கிறார்கள், பாதுகாப்பு மற்றும் பார்க்கிங் வசதிகள் தொடர்பான கேள்விகளும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இது, தற்போதுள்ள பயணிகளின் விவரங்களை தெரிந்துக் கொள்ளவும், குறைபாடுகளைக் கண்டறிந்து, சேவைகளை மேம்படுத்தவும், திருத்த நடவடிக்கைகளை எடுக்கவும் உதவியாக இருக்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அக்டோபரில் மட்டும் 90, 83,996 பேர் பயணித்த நிலையில் நவம்பர் மாதத்தில் 83.61 இலட்சம் ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *