“தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி’ என்று, அதிமுக எம்.பி. மு. தம்பிதுரை, அதிரடியாக பேசி உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கசிநாயக்கன்பட்டி பெரியகரம், மாணவள்ளி, நரியனேரி ஆகிய ஊராட்சி பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளாருமான கே. சி. வீரமணி, அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளாரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு பூத் கமிட்டு பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை, “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மூலம் திமுக அரசு 1000 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டு உள்ளது என, ED யால் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி 40000 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளதாக ஒப்பு கொண்டு உள்ளார்” என்றும், தெரவித்தார்.
“எனவே, டெல்லியின் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் டாஸ்மாக் மூலம் ஊழல் செய்யப்பட்டு சிறை சென்றது போல், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறை செல்வது உறுதி” என்றும், அதிமுக எம்.பி தம்பித்துரை தெரிவித்தார்.
அத்துடன், “திமுக அரசு மத்திய அமைச்சரவையில் 18 ஆண்டு காலம் பதவி வகித்து வந்தனர். அப்போது தான், காங்கிரஸ் ஆட்சியில் நீட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. அப்போது, திமுக அரசு என்ன செய்தது?” என்றும், தம்பித்துரை கேள்வி எழுப்பினார்.
மேலும், “மு.க.ஸ்டாலின் சிறைக்கு செல்வதை தவிர்க்கவே மும்மொழி கொள்கையில் நாடகம் ஆடி வருகிறார்” என்றும், மு. தம்பிதுரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும்” என்றும், மு. தம்பிதுரை பேசினார்.