சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயியின் முன்பு நேருக்கு நேர் நின்ற பெண் ஒருவர், ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயிலில் அடிப்பட்டு உயிரிழக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்.
சென்னையில் மின்சார ரயிலில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட பதபதைக்க வைக்கும் வீடியோ வெளியான விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் யார் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டு உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, தனது மடியிலேயே தனது தாய் மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சியில் மனரீதியாக பாதிக்கப்பட்டு ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
அதாவது, கடந்த 18 ஆம் தேதி மாலை 6 மணி அளவில், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பழவந்தாங்கல் மற்றும் செயின் தாமஸ் மவுண்ட் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து, மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது ரயில் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றதால் ரயிலில் அடிபட்டு இறந்தாரா? மேலும், இறந்த பெண் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அந்த பெண் தற்கொலை செய்துதான் உயிர் இழந்துள்ளார் என மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், உயிரிழந்த பெண் பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 48 வயதான கவிதா என்பதும் தெரிய வந்து உள்ளது. இவருக்கு, திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருப்பதும் தெரிய வந்தது.
அத்துடன், 4 ஆண்டுகளுக்கு முன்பு கவிதாவின் தாய் அமிர்தவள்ளிக்கு வீட்டில் இருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதும், அப்போது கவிதா தனது அம்மாவான அமிர்தவள்ளியை மடியில் வைத்து அழுது கொண்டிருந்தபோதே அமிர்தவல்லியின் உயிர் பிரிந்துள்ளது.
மேலும், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்ததும், கவிதாவின் மன அமைதிக்காக குடும்பத்தினர், இவரை கோவில், பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக அழைத்துச் செல்வதும் தெரிய வந்தது.
இந்த நிலையில், தான் கடந்த 18 ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து திடீரென யாரிடமும் சொல்லாமல் வெளியேறி பழவந்தாங்கல் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றதும், அப்போது தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலை பார்த்ததும் ரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டதும் ரயில்வே போலீசார் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இந்த சம்பவம், குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.