ஹர்திக் பாண்டியாவை தல தோனி பழி தீர்த்த நிலையில், “CSK அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவே காரணமாக அமைந்துள்ளாகவும்” விமர்சனங்கள் வரிசைக் கட்டத் தொடங்கி உள்ளன.
IPL 2024 தொடரின் 29 வது லீக் ஆட்டத்தில் CSK vs MI அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்ததால், சென்னை அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே, வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ், அரைசதம் விளாசினார். 40 பந்துகளில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 69 ரன்களை எடுத்திருந்த போது அவர் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே, தன் பங்குக்கு 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என அதிரடி ஆட்டம் ஆடி ஆட்டமிழக்காமல் 66 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
என்றாலும், CSk ரசிகர்கள் போட்டியை பார்க்க வருவதே தல தோனியின் சின்ன சின்ன கேமியோவுக்கு தான். ஆனால், ரசிகர்களுக்கு இந்த போட்டியில் கறி விருந்தே கிடைத்து சாப்பாடே கிடைத்தது போல் அமைந்தது இந்த போட்டி. அதாவது, கடைசி 4 பந்துகள் மட்டுமே மீதமிருக்க களமிறங்கிய தல தோனி, ஹர்திக்கின் கடைசி ஓவரில் அந்த 4 பந்துகளை சிக்ஸர் மழை பொழிந்தார். ஹர்திக் வீசிய 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்ததால் ரசிகர்கள் குதூகலத்தால், ஸ்டேடியமே அதிர்ந்தது.
இந்த குதூகலத்தை CSk ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மும்பை ரசிகர்களும் எஞ்சாய் செய்ய, மும்பை மைதானமா? இல்லை, சென்னை மைதானமா? என்பது போல் மாறிவிட்டது. இதனால், சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கி மும்பை ஓபனிங்கிலேயே அதிரடி காட்டியது.
இஷான் கிஷானும், ரோகித்தும் முதல் 7 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் அதிரடி காட்டினார். ஆனால், இம்பேக்ட் ப்ளேயராக வந்த மதீஷ் பதிரனா, இஷானின் விக்கெட்டை எடுத்தது மட்டுமில்லாமல், அடுத்த 2 பந்துகளில் புதிததாக வந்த சூர்யகுமார் யாதவ்வின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
ஒரு பக்கம் ரோகித் மட்டுமே நிலைத்து ஆட, அடுத்தடுத்து வந்த மும்பை பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் திரும்பினனாலும் மும்மை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். ஆனாலும், அவர் சதத்தை கொண்டாட முடியாத சூழலில், அந்த மேட்ச் நிறைவடைந்தது. சென்னை அணி 20 ரன்களில் வெற்றிப்பெற்று தனது 4 வது வெற்றியை இந்த சீசனில் பதிவுசெய்தது.
வெற்றி குறித்து பேசிய CSk அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “இளம் விக்கெட் கீப்பரின் அதிரடி ஆட்டமே வெற்றிக்கு வழி வகுத்தது” என, தல தோனி குறித்து புகழாரம் சூட்டினார்.
இதனிடையே, CSk அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவே காரணமாக அமைந்து உள்ளதாக ரசிகர்கள் தற்போது விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.