Sat. Jan 11th, 2025

நடிகர் தனுஷின் தாயார் தாக்கல் செய்த வழக்கு.. யார் மீது தெரியுமா?

By indiamediahouse Jun5,2024

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில், பொதுவான பகுதிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து உள்ளதாக நடிகர் தனுஷின் தாயார் தாக்கல் செய்த வழக்கில், சென்னை மாநகராட்சி மற்றும் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை தி நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள கோல்டன் அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி, திருநாவுக்கரசு மற்றும் நுஷ்ரத் அபிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கில், உரிய அனுமதியுடன் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திறந்தவெளி மேல் தளத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதை குடியிருப்புவாசிகள் தடுப்பதாகவும், அதனால் தரைத்தளத்தில் உள்ள நடிகர் சரத்குமார் சட்ட விரோதமாக பொது பகுதியை ஆக்கிரமித்து, வணிக ரீதியாக பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

அத்துடன், இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், மற்றும் செந்தில்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்தி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் குடியிருப்பின் பொதுவான பகுதிகளை மற்ற குடியிருப்புவாசிகள் பயன்படுத்துவதை தடுப்பதாகவும், இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *