“போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜனை சமாதானப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாக” விமர்சனங்கள் எழுந்து உள்ளது.
‘கொளுத்தும் வெயிலில் மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் நின்ற தமிழிசை” என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்..
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னை கே.கே. நகர் எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொது மக்களிடம் இன்று காலை கையெழுத்து இயக்கம் நடத்துவதற்காக பாஜக வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார். ஆனால், காவல் துறை அனுமதி அளிக்காததால், தொடர்ந்து 3 மணி நேரம் ஒரே இடத்தில் இன்று காவல் துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பொது மக்களை சந்திப்பதற்கு எந்த அனுமதியும் தேவை இல்லை என்ற நிலையில், காவல் துறை தன்னை அனுமதிக்க மறப்பது தவறு என்று, போலீசார் உடன் தமிழிசை வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
எனினும், காவல் துறையினர் அதற்கு அனுமதி மறுத்தனர். இறுதியில் “கையெழுத்து வாங்காமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்” என்று, தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதிப்பட கூறியதால் காவல் துறை என்ன செய்வது, இவரை எப்படி கையால்வது என்று புரியாமல் தடுமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முடிவில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சிலரிடம் கையெழுத்து வாங்கிய பிறகே, போராட்ட இடத்தில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன் புறப்பட்டு சென்றார். ஆனால், அவரை போலீசார் அங்கும் இங்கும் செல்லாத படி, அவரை சுற்றி போலீசார் நின்றதாகவும், இதனால் தமிழிசை கொளுத்தும் வெயிலில் சுமார் மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் நின்றதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் “முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார்” என்று, கடுமையாக விமர்சனம் செய்தார். அத்துடன், “முதல்வர் அப்டேட்டாக இல்லை என்றும், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது அடுக்கடுக்காண விமர்சனங்களை வீசினார் தமிழிசை சௌந்தரராஜன்.
மேலும், “ஒரு அரசியல் கட்சித் தலைவரை வெயிலில் 3மணி நேரம் நிற்க வைத்து காவல் துறையினர் கொடுமைப்படுத்தினர்” என்றும், தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.