Sun. Dec 22nd, 2024

இயக்குனர் அமீர் பேசிய அரசியல்! யாருக்கு எதிராகத் தெரியுமா?

கெவி திரைப்படத்தின் சிறப்பு தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது, அதில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய இயக்குனர் அமீர், “கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால், 2 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். “கெவி” என்ற கிராமத்தில், கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு 7 மணி நேரம் ஆகிறது.

அந்தக் “கெவி” என்ற கிராமத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு பெண் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் செல்லாமல் உயிரிழந்தார். சுதந்திரம் பெற்றும் இவ்வளவு காலம் கடந்தும், இன்னும் இது போன்ற சிரம்மங்களை நாம் அனுபவிக்கிறோம்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்னும் ஆற்றைக் கடந்து மருத்துவமனைக்கு செல்வது, கல்வி கற்க செல்வது, உணவு பொருட்களை வாங்க செல்வது என்ற நிலை இருக்கிறது. தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் பொழுது, எதற்காக கார் ரேஸ் பந்தயம் நடத்துகிறார்கள்? இது ரொம்ப முக்கியமா?” என்றும், அமீர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அமீர், “’வாழை’ திரைப்படம் வெற்றி பெற உள்ள இடத்தில் உள்ளது. புதிய நடிகர்களோ, இயக்குனர்களோ முதல் முறை படத்தை தயாரித்தால் அந்தத் திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு அனுபவம் வாய்ந்த இயக்குனர்களை வைத்து சரி பார்க்க வேண்டும். அப்படி சரி பார்த்தால் தான்> அந்த திரைப்படத்தின் கருத்து மக்களிடையே சென்று வெற்றி அடையும்.

ஏசியன் விளையாட்டு போட்டி நடத்துவதும், ஒலிம்பிக் போட்டி நடப்பது குறித்து இந்த அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள் .

‘ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கு ஒரு கிராமத்தை உருவாக்குகிறார்கள். ஆனால், ஒரு கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்யத் தர மறுக்கிறார்கள். இத்திரைப்படத்தில் வெற்றி அரசியலில் எதிரொலிக்க வேண்டும்.

இந்த திரைப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்க்க வேண்டும். முதலமைச்சர் மட்டுமல்லாமல், அமைச்சர்களும் இந்த திரைப்படத்தை பார்த்து அந்த பகுதிக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்” என்றும், இயக்குனர் அமீர் வலியுறுத்தினார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *