“குளித்தலையில் காவல் சிறப்பு உதவியாளரை தகாத வார்த்தையால் திட்டி, அரசு பணியை செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்த”, திமுக பிரமுகர் மற்றும் அவரது மகனை நங்கவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இனுங்கூரில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் டாஸ்மார்க் கடையில் தமிழக முதல்வருடைய போட்டோ வைப்பது சம்பந்தமாக அறிவிப்பு செய்திருந்தனர், இதை அடுத்து நங்கவரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் மற்றும் பெண் போலீசார் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு மதுபான கடை வளாகத்தில் செயல்பட்டு வந்த பாரில் தற்பொழுது அரசு அனுமதி இல்லாமல் கள்ளச் சந்தையில் அரசு மதுபானங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அரசு அனுமதி இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என கேட்டபோது மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த இனுங்கூர் கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் இளங்கோவன் வயது 60 இவரது மகன் நவீன் வயது 24 ஆகிய இருவரும் போலீசார்களை தகாத வார்த்தையால் பேசி திட்டியும், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் இது குறித்து சிறப்பு காவல் உதவிய ஆய்வாளர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார், தகவல் அறிந்த மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த திமுக பிரமுகர் அவரது மகன் இருவரும் ஓடி விட்டனர், பின்னர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து நங்கவரம் காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் மதியழகன் நங்கவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அரசு அனுமதியில்லாமல் மது பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த திமுக வினர் இளங்கோவன் மற்றும் அவரது மகன் நவீன் ஆகிய இருவர் மீது நங்கவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
காவல் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் மற்றும் அவரது மகனை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.