“ஊடகத்திற்கு முன் சீமான் சீன் போடாதே” என்று, சீமானுக்கு காட்டமான பதிலை அளித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறை சம்மன் அளிக்கப்பட்டது. அப்போது, சீமான் வீட்டில் காவலாளி மற்றும் உதவியாளர் தாக்குதல் நடத்திய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. “கண்டிப்பாக 2-வது சம்மனுக்கு ஆஜராக வேண்டும் இல்லை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனால், நேற்று காலை 11 மணிக்கு சீமான் ஆஜராகாமல், வழக்கறிஞர்கள் மூலம் மாலை ஆஜராக வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி, இரவு 10 மணிக்கு சீமான் ஆஜராகி போலீசாரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
குறிப்பாக, சீமானிடம் 63 கேள்விகள் கேட்கப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்திருந்தது. “நடிகை 60 லட்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டது. முக்கியமாக, “விரும்பியே உறவு வைத்துக் கொண்டவர் நடிகை” என சீமான் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, சீமான் 2023 ஆம் அளித்த வாக்குமூலத்தையும் தற்போது அளித்துள்ள வாக்குமூலத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை அளித்த வாக்குமூலத்தையும், சீமான் அளித்த வாக்குமூலத்தையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். தேவைப்பட்டால் விசாரணைக்கு மீண்டும் அழைப்போம் எனவும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பிப்போம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான், “ஊடகத்திற்கு முன் சீமான் சீன் போடாதே” என்று, சீமானுக்கு காட்டமான பதிலை அளித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
இது குறிதது நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், “கடந்த 2023 ஆம் ஆண்டு எதற்காக 50 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் எதற்கு அனுப்பினாய்? மதுரை செல்வத்தை ஏன் காப்பாற்றுகிறாய்? எதற்காக வீடியோக்களை என்னிடம் வாங்கினீங்க? சீமான் அநாகரீகமாக பேச வேண்டாம்.
6 மாதம் தான் பழகினேனா? சீமான் அசிங்கமாக பேசாதே. எதற்காக மதுரை செல்வம் வீடியோக்களை வாங்கினார்? எதற்காக எனது அக்காவிற்கு வாழ்த்து சொன்னாய்?
ஊடகத்திற்கு முன் சீமான் சீன் போடாதே” என்று, சீமானுக்கு காட்டமான பதிலை அளித்துள்ளார் அந்த நடிகை.