ஒட்டு மொத்தமாக துபாயை மூழ்கடித்த பேய் மழைக்கு என்ன காரணம்? ஏன் இப்படி ஒரு வரலாறு காணாத மழை என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்..
இந்தியா இதுவரை முழுமையான தண்ணீர் பஞ்சத்தை பார்த்தது கிடையாது. “அப்படி ஒரு மனிதன் தண்ணீர் பஞ்சம் என்றால் என்ன?” என்று தனது தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், தனது வாழ்நாளில் ஒரு முறையாவது United Arab Emirates நாட்டிற்கு சென்று வர வேண்டும். அப்போது தான், தண்ணீர் பஞ்சம் என்றால் என்ன? என்ற புரிதல் கிடைக்கும். காரணம், மழை என்பது அத்தி பூ பூப்பது போல் எப்போதோ ஒரு முறை லோசாக தூவானம் தூவி செல்லும். அவ்வளவுதான் அந்நாட்டிற்கும் மழைக்குமான தொடர்பு. ஆனால், அந்நாட்டில் கூட தற்போது மரங்கள் வளர்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
பாலைவனமாக காட்சி அளித்த United Arab Emirates நாட்டில், நகரமயமாக்கம் எல்லாம் செயற்கையாகவே சொல்லி வைத்து உருவாக்கப்பட்டவை.
அப்படியாக, அந்நாடு உள் கட்டமைப்புக்கு பெயர் போன துபாய் நகரம், உலக பிரசித்துப் பெற்று இன்று திகழ்கிறது. அந்த நாட்டில் அந்த நகரில் தான் தற்போது வரலாறு காணாத வகையில் பேய் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது.
இந்த பேய் மழைக்கு வானிலை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
கால நிலை மாற்றம் உலகம் முழுவதும் அசாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடும் இதுவரை கடும் மழையை எதிர்கொண்டிருந்தால், தற்போது வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது. வெயிலை அதிகம் எதிர்கொண்டிருந்தால், தற்போது மழை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது. வெயிலும் – மழையும் பார்த்திருக்கும் இந்தியா போன்ற நாட்டில் இரண்டுமே தற்போது ஒரே அடியாக பழிவாங்கிக்கொண்டு இருக்கிறது. குளிர் நிலவும் பனிப்பிரதேசங்களில் வரலாறு காணாத வெயிலால் காடுகள் பற்றி எரிகின்றன. இப்படியான காலநிலை மாற்றம், பல நாடுகளை பதம் பார்த்துவிட்டு, பாலைவனத்தின் கதவையும் தற்போது உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கிறது. அதாவது,
இப்படியான கால நிலை மாற்றம் தான் தற்போது United Arab Emirates நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது.
கடந்த 2 நாட்களாக அதாவது 16, 17 ஆம் தேதிகளில் இஸ்லாமிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரமான புயலும், மழையும் தாக்கி இருக்கிறது. முக்கியமாக, United Arab Emirates நாட்டில் மட்டும் ஒரு வருடத்திலேயே 94 மில்லிமீட்டர் மழை தான் பெய்யும். ஆனால், தற்போது ஓரிரூ நாட்களில் அங்கு மட்டும் 142 மில்லி மீட்டர் அளவுக்கு பேய் மழை கொட்டி தீர்த்திருக்கிறது.
இது வரை வெயிலையை மட்டுமே பார்த்த அந்நாட்டு மக்களுக்கு, இந்த பேய் மழையும், சாலைகளில் பெருக்கெகடுத்து ஓடும் இந்த மழை நீரும் புத்தம் புதிதாக காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது.
துபாய் நகரம் என்னதான் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த நாட்டின் உள்கட்டமைப்பு பெரும் மழையை எதிர்கொள்ளாதவாரே அமைக்கப்பட்டு இருக்கின்றன. காரணம், அங்கு மழை பெய்வது அபூர்வம் என்பதால். இதனால், அங்கு பெய்யும் இது போன்ற பெரும் மழை, தற்போது அந்நாட்டு மக்களை பெரும் துயரத்திலும், கஷ்டத்திலும் ஆழ்த்திரு இருக்கிறது என்பதே உண்மை.
மேலும், பாலைவன பகுதிகளில் மழை விதைப்பு எனும் “கிளவுட் சீடிங்” முறையை பயன்படுத்தி செயற்கை மழையை பெய்ய வைப்பதால், இப்படியா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் தற்போது அங்கு எழுந்து உள்ளது.
இந்த சூழலில், துபாய் மழை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், “காலநிலை ஆய்வாளருமான ஃபிரட்ரிக் ஓட்டோ, வெப்பமான வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தை வைத்திருக்கும், அதே வேளையில் காலநிலை வெப்பமடைவதால் அதிக மழை உண்டாகுவதாக” கூறியுள்ளார்.
அத்துடன், “கிளவுட் சீடிங் எனும் மேக விதைப்பு முறைக்கும் தற்போது பெய்த பெருமழைக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றும், அவர் விளக்கம் அளித்து உள்ளார்.