Mon. Dec 23rd, 2024

“கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானமேரி வைகுண்டம் போனான்” செல்லூர் ராஜூ சொன்ன பழமொழி! ஏன்? யாருக்கு?

“கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானமேரி வைகுண்டம் போனான் என்பதைப் போல இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்விக்குறி” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பழமொழி பேசியது அரசியல் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மேலகோட்டையில் இருக்கும் தனியார் மண்டபத்திற்கு நேரில் வந்து ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “உள்ளூர் மக்களுக்கு இந்த சுங்கச்சாவடி மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குகிறது” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“இந்த சுங்கச்சாவடி அகற்ற வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. எங்கள் ஆட்சியின் போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதல்வரிடம் பேசி இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆதார் எண்ணை மட்டும் காட்டி இலவசமாக பயணிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும், தேர்தல் அறிவித்தவுடன் தேர்தல் அட்டவணையை வைத்து மீண்டும் அனைவரிடமும் வசூலிக்க செய்தார்கள். தேர்தலின் போது இந்த சுங்கச்சாவடியை அகற்ற உத்தரவிடுவேன் என்று முதல்வர் வாக்குறுதி கொடுத்தார்” என்றும், கூறினார்.

“இந்த அரசு ஆட்சி நடத்துவதற்கு எந்தவித பிரச்சனையும் இல்லாத அளவிற்கு எங்கள் ஆட்சியில் எடப்பாடியார் வேலை செய்ததற்கு அவர்கள் எங்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்றும், என்ன சுங்கச்சாவடி ஊழியர்கள் பொதுமக்களிடம் மோசமாக நடந்து கொள்கிறார்கள் எனக் கூறி, ஏற்கனவே ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சுங்கச்சாவடியை இடம் மாற்றி மேலக்கோட்டையில் வைக்க வேண்டும் என மக்கள் சொல்கிறார்கள். இதை தீர்க்க கூட வக்கில்லாத அரசாக இந்த அரசு உள்ளது” என்றும், கடுமையாக அவர் விமர்சனம் செய்தார்.

அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் மற்றும் தங்கம் தென்னரசு இந்த சுங்கச்சாவடியை கடந்து தான் செல்கிறார்கள். ஆனால், ஏன் இவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் முன்னால் அமைச்சரை யாரும் பார்க்கவும் அனுமதிக்கவில்லை யாராவது பார்க்க வந்தால் அவர்களையும் கைது செய்து இருக்கிறார்கள். இது நியாயமற்ற கொடுங்கோல் அரசாக இருக்கிறது” என்றும், அவர் சாடினார்.

“காவல் துறையின் அட்டூழியம் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. போராட்டத்தை நசுக்கு கின்ற வகையில் போராட்டத்திற்கு மக்கள் செல்லக்கூடாது என வைத்துவிட்டியே கைது செய்துள்ளார்கள். ரவுடிகளை தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வார்கள். ஆனால், இங்கே மக்களை செய்கிறார்கள். தீவிரவாதிகளை போல நடத்துவது போலீசின் அராஜகம் கண்டிக்கத்தக்கது” என்றும், அவர் கண்டனம் தெரிவித்தார்.

முக்கியமாக, “கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானமேரி வைகுண்டம் போனான் என்பதைப் போல இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்பது தான் கேள்விக்குறி என்றும், இந்த அரசு தீர்க்க விட்டால் நாம் இவர்களுக்காக இந்த பிரச்சனையை தீர்த்துக் கொடுப்போம் என எங்கள் பொதுச் செயலாளர் சொல்லி இருக்கிறார். இந்த பிரச்சனைக்கு நிச்சயமாக துணை இருப்போம் என்று சொல்லி இருக்கிறார்” என்றும், அவர் பரபரப்பாக பேசினார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *