மாமனார் – மாமியார் சேர்ந்து, மருமகனை அடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள சில்லார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான சிவசங்கர், அதே கிராமத்தைச் சேர்ந்த ரம்யா என்பவரை, கடந்த 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து, குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், மனைவி ரம்யாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு, அவர் மனைவியை அவர் அழைக்க சென்று உள்ளார். அப்றபோது, மாமனார் பச்சையப்பன் மருமகன் சிவசங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, கடும் ஆத்திரம் அடைந்த மாமனார் பச்சையப்பன், மருமகன் சிவசங்கரை கட்டையால் அடித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, சிவசங்கர் தந்தை சந்தியப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கடத்தூர் போலீசார், கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டானர். இந்த விசாரணையில், மாமனார் பச்சையப்பன் அவரது மனைவி கவிதா இருவரும் சேர்ந்து தான், மருமகன் சிவசங்கரை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, மருமகனை அடித்து கொலை செய்த மாமனார் – மாமியாரை கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து, சிவசங்கர் உறவினர்கள் கடத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
இதனிடையே, மருமகனை மாமனார் மாமியார் இருவரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.