Sun. Dec 22nd, 2024

Favorite Color Personality Test: உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமா? அப்ப உங்க குணம் இப்படி தான் இருக்கும்..

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலர் மிகவும் பிடித்தமான கலராக இருக்கும். நமக்கு பிடித்த கலருக்கும் நம்முடைய குணத்திற்கும் உளவியல் ரீதியாக அதிக தொடர்பு உள்ளது. எனவே, ஒருவருக்கு பிடித்த நிறம் எது என்று தெரிந்தாலே அவர் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்பதை ஈஸியாக தெரிந்துக் கொள்ள முடியும். சரி வாங்க, உங்களுக்கு பிடித்த கலரை வைத்து உங்கள் குணம் எப்படி இருக்கும் என்று தெரிந்துக் கொள்வோம்.

கருப்பு கலர் பிடிக்குமா?

உங்களுக்கு கருப்பு நிறம் பிடிக்கும் என்றால், உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளவே மாட்டீர்கள். தன்னம்பிக்கை அதிகம் உள்ளவராக இருப்பீர்கள். எடுத்த முயற்சியில் வெற்றியடையும் வரை பின்வாங்கவே மாட்டீர்கள். வாழ்க்கையில் அதிகாரத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைப்பீர்கள்.

பிங்க் கலர் பிடிக்குமா?

உங்களுக்கு பிங்க் நிறம் பிடிக்கும் என்றால், எந்த விஷயத்திலும் யோசித்து நிதானமாக முடிவு எடுப்பீர்கள். குழந்தைகளிடம் அதிகம் பாசம் காட்டுபவராக இருப்பீர்கள். எளிதில் கோபம் வராது. அனைவரிடமும் கெட்டதை விட நல்லதை மட்டுமே அதிகம் பார்ப்பவராக இருப்பீர்கள்.

ஆரஞ்சு கலர் பிடிக்குமா?

உங்களுக்கு ஆரஞ்சு நிறம் பிடிக்கும் என்றால், உங்கள் குடும்பத்தை மிகவும் நேசிக்கும் நபராக இருப்பீர்கள். ஆனால், அதை வெளிகாட்டிக் கொள்ள மாட்டீர்கள். உங்க வாழ்க்கையில் பொறுமை என்ற வார்த்தைகே இடம் கொடுக்க மாட்டீர்கள். அடுத்தவர் விஷயங்களில் அவசரப்பட்டு தலையிட்டு வாங்கிக்கட்டிக் கொள்வீர்கள்.

பச்சை கலர் பிடிக்குமா?

உங்களுக்கு பச்சை நிறம் பிடிக்கும் என்றால், நீங்கள் உங்களுடைய சந்தோஷத்தை விட மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பீர்கள். எதையும் தொலைநோக்கு பார்வையுடனே பார்ப்பீர்கள். புத்திசாலி.

வெள்ளை கலர் பிடிக்குமா?

உங்களுக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் என்றால், நீங்கள் மிகவும் வெளிப்படையான மனதை கொண்டிருப்பீர்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டீர்கள். எந்த விஷயத்திலும் எளிமை மற்றும் அமைதியை விரும்புவீர்கள். பொறுமைக்கு மறுபெயர் நீங்கள் என்றே சொல்லக்கூடிய அளவிற்கு பொறுமையானவராக இருப்பீர்கள்.

சிவப்பு கலர் பிடிக்குமா?

உங்களுக்கு சிவப்பு நிறம் பிடிக்கும் என்றால், நீங்கள் மிகவும் பாசமான நபராக இருப்பீர்கள். நீங்கள் விரும்பியதை கிடைக்க எந்த அளவிற்கும் செல்வீர்கள். துணிச்சல் அதிகமாக இருக்கும். எதிலும் நேர்மையாக இருக்க வேண்டும் நினைப்பீர்கள். மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவீர்கள்.

நீல கலர் பிடிக்குமா?

உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்றால், உங்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது மிகவும் பிடிக்கும். எதைச் செய்தாலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்களை எளிதில் புரிந்துக்கொள்ளக்கூடியவராக இருப்பீர்கள்.

ஊதா கலர் பிடிக்குமா?

உங்களுக்கு ஊதா நிறம் பிடிக்கும் என்றால், நீங்கள் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவராக இருப்பீர்கள். நல்ல படைப்பாற்றல் மிக்கவர்கள். இரக்க குணம் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யக்கூடியவராக இருப்பீர்கள். ஏக்க குணம் அதிகம் உடையவராக இருப்பீர்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *