“தங்கலான்” படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்ககோரி, திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் புதிய படமான “தங்கலான்” படத்தில், புத்த மதத்தை உயர்த்துவதற்காக, வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளதாகவும், அதனால் குறிப்பிட்ட சர்ச்சைக்குறிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக, “தங்கலான்” படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கா விட்டால், படத்திற்கு தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் வழக்கறிஞர் பொற்கொடி தெரிவித்து உள்ளார். இதனால், “தங்கலான்” படம் வெளிவந்த பிறகும், படத்திற்கு சிக்கல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.