Mon. Dec 23rd, 2024

அய்யயோ.. சென்னையில் மீண்டும் மர்ம காய்ச்சலா?!

By Aruvi Apr24,2024

மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மீண்டும் சென்னை மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை அடுத்து உள்ள செங்குன்றம் பெரியார் நகரில் வசித்து வரும் சங்கர் – கோவிந்தம்மாள் தம்பதிக்கு 7 வயதில் சிவா என்ற மகன் இருந்தார். சிவா, கடந்த ஒரு வாரமா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், சிவாவின் பெற்றோர் மகனுக்கு சாதாரண காய்ச்சலா இருக்கும் என நினைத்துக் கொண்டு அருகில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை – மருந்து வாங்கி கொடுத்து உள்ளனர். ஆனால், காய்ச்சல் துளியும் நிற்காமல் மீண்டும் அதிகமாகி இருக்கிறது.

இதனையடுத்து, காய்ச்சல் அதிகமாகி சிவா அவதிபட்டதால் அருகில் உள்ள பாடியநல்லூர் பகுதியில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். அங்கு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிவா, அங்கேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மர்ம காய்ச்சல் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதும் தெரிய வந்தது. இதனால், சிறுவனின் பெற்றோர் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதனையடுத்து, மருத்துவமனை சார்பில் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் மர்ம காய்ச்சல் குறித்து விவரம் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், சிறுவன் மரணம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னை அருகே 7 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் செங்குன்றம் பகுதியில் மட்டுமில்லாது சென்னையிலும் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *