வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு – இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் நேற்றில் இருந்தே தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, கரூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், திருநெல்வேலி (5ம் வகுப்பு வரை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ஃபெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பே இன்னும் முடியாத நிலையில் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், 7 மாவட்டங்களில் நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதால் நீர் வழித்தடங்களில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.