Tue. Jul 1st, 2025

பெண் தோழியின் பெயரில் 9 வங்கியில் 66 லட்ச ரூபாய் மோசடி!

பெண் நண்பர் பெயரில் 9 வங்கியில் 66 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சென்னை கொளத்தூர் சம்சாரியா காலனி பகுதியில் வசிப்பவர் ஜமுனா. இவர் கடந்த 2015 முதல் 21 ஆண்டு வரை சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அதே நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த வண்டலூர் ஓட்டேரி 4 வது பிரதான சாலையை சேர்ந்த ஹரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாக பழகி வந்து உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2021 ஆண்டு இருவரும் வேலையை விட்டுள்ளனர். இந்த நிலையில் ஜமுனா பெரம்பூரில் உள்ள தனியார் வங்கி (எச்டிஎஃப்சி) வங்கியில் வாங்கிய 7 லட்ச ரூபாய் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்து உள்ளார். அப்போது, ஜமுனா தனது நண்பர் ஹரிஷிடம் இது குறித்து தெரிவித்த போது ஹரிஷ் தனக்கு தொழில் செய்ய பணம் தேவைப்படுவதாகவும், வேளச்சேரியில் உள்ள எனது நண்பர் சதீஷ்(40) சொந்தமான தொழில் செய்து வருவதால் அவருடன் சேர்ந்து தொழில் செய்தால் நல்ல லாபமும் கிடைக்கும் என்றும், கடனையும் அடைத்து விடலாம் என்றும், கூறியுள்ளார்.

அதன்பின்பு, ஹரிஷ் ஜமுனாவிடம் கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் சதீஷ்குமார் வங்கியில் கடன் பெற்று தரும் வேலை செய்து வருவதாகவும் அவரிடம் சொல்லி வங்கியில் 66 லட்ச ரூபாய் கடன் வாங்கி அதில் 7 லட்ச ரூபாயை உனது கடனை அடைத்து விட்டு‌, மீதி பணத்தை தொழிலில் முதலீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி ஜமுனா ஹரிஷ் கூறிய ஆலோசனையை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஹரிஷ், சதீஷ், இருவரும் சேந்தது ஜமுனா வங்கியில் அடமானம் வைத்த வீட்டு சொத்து பத்திரம் மற்றும் அவரது ஆதார், பான்கார்டு, உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வங்கியில் கடன் பெற்று‌தரும் வேலை செய்து வந்த சதீஷ்குமாரிடம் கொடுத்து ஜமுனா பேரில் ஐடிஎப்சி, எஸ் பேங்க், முத்தூட் பைனான்ஸ் என 9 வங்கியில் 66 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். பின்னர் ஜமுனா வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட 66 லட்ச ரூபாய் கடன் தொகையை ஹரிஷ் பல்வேறு வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறி பெற்றுக்கொண்டார்.

பின்னர் ஹரிஷ்,சதீஷ், 2022 ஆண்டு வரை கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் அதன்‌பிறகு வங்கி கடனை செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் வங்கி ஊழியர்கள் ஜமுனாவை தொடர்பு கொண்டு கடனை செலுத்துமாறு வற்புறுத்தி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட ஜமுனா உடனே ஹரிஷ் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜமுனா நேற்று இது குறித்து வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இந்த புகாரை ஓட்டேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதன் பேரில் ஓட்டேரி போலீஸார் ஹரிஷ், சதீஷ், சதீஷ்குமார், ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *