Mon. Jun 30th, 2025

“குட் பேட் அக்லி” சினிமாவில் ஒரு ஸ்கேம்..

GoodBadUgly

‘போன படத்துல என்னவெல்லாம் ஹிட்டு..
பழைய பாட்டு வச்சு பைட் சீன் எடுத்தோம்..’

‘அப்ப அதையே இந்தப் படத்துலேயும் வச்சு. ப்ரொடியூசர் கிட்ட சொல்லி 3,4 பாட்டுக்கு காப்பிரைட் வாங்கிடு..’

‘அப்புறம்,’

‘போன படத்துல சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்தோம்.
அப்ப இந்தப் படத்துல சிம்ரனை இறக்குவோம்..’

‘அடுத்து,’
‘போன படத்துல அந்த அனகோண்டா துப்பாக்கி செம்ம ஹிட்டு.
அப்ப, அதே மாதிரி தலைக்கு..’

‘அண்ணே..’
‘தலைக்கு வேற மாதிரி துப்பாக்கி இறக்குவோம்னு சொல்ல வந்தேண்டா..’
‘இதைதெல்லாம் வச்சா அப்புறம் கதை எப்படி வரும்..?’

‘கதை என்னடா கதை.. தல நடிச்சு ஹிட்டான எல்லா படத்துல இருந்து ரெபரன்ஸ் எடு.. அதையெல்லாம் படத்துல அங்கங்க தூவி விடறோம்..
‘தலக்கு என்ன கேரக்டர்..?’
‘அவர் இந்தப் படத்துல டான்!’
‘அதெல்லாம் அவரு பில்லாவுலேயே பண்ணிட்டாரு..’

‘அப்ப அந்த கேரக்டரையே கண்டினியூ பண்ணிருவோம். அதுல தல டான். இந்தப்படத்துல டான் டான்..’

‘அப்படின்னா?’
‘டானுக்கெல்லாம் டான்..’

இப்படித் தான், இந்தப் படத்துக்கு டிஸ்கஷன் நடந்திருக்க வேண்டும்..

இப்போதும் வரும் இளைய தலைமுறை இயக்குனர்கள் எல்லாருமே சினிமாவில் ஸ்கேம் தான் செய்கிறார்கள். ஒரு படத்தில் அவர்களுடைய ஒரு ஐடியா ஹிட்டாகிவிட்டால் அதையே, ரீமிக்ஸ் செய்து அடுத்த படங்களில் பயன்படுத்தி, ரசிகர்களை ஏமாற்றுகிறார்கள். மொத்த கிரியேட்டிவிட்யும் ஒரு படத்துடன் முடிந்து விடும் போலிருக்கிறது.

நான் எவ்வளவு பெரிய தல பேன் தெரியுமா? என்று அஜீத் ரசிகர்களை மட்டுமல்லாமல், அஜீத்தையும் சேர்த்தே ஸ்கேம் செய்திருக்கிறார் இயக்குனர் ஆதிக். இதையெல்லாம் என்ன சொல்லி அஜீத்தை சம்மதிக்க வைத்தார் என்று தான் புரியவில்லை. பில்லாவுக்குப் பிறகு இந்தப் படத்தில் தான் அஜீத் அதிகமாக நடக்கிறார். அனேகமாக அசர்பைஜானில் இருந்து அவர் ஸ்பெயினுக்கு நடந்து வரும் நேரத்தில் படத்தை முடித்து விட்டார்கள் போல..

ஜி வி பிரகாஷுக்கு சம்பள பாக்கி போல.. அந்தக் கோபத்தை எல்லாம் பி ஜி எம்மில் இறக்கி விட்டார். தியேட்டரை விட்டு வெளியே வரும் போது காது சும்மா ” ஙொய்ய்ய்ய்ய்” என்று இருக்கிறது. பிஜி எம் மட்டும் போதாது என்று ராப், கானா என அனைத்தையும் கலந்து கட்டி, நம்மை சித்ரவதை செய்து அனுப்புகிறார்.
படத்தில் லாஜிக் எல்லாம் மருந்துக்கும் இல்லை. இயக்குனர் ஆதிக்கிற்கு தான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக disorder இருக்கிறது என்று நினைக்கிறேன். ஹீரோயின் திரிஷா இன்னொரு ஸ்கேம்.

தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு தமிழ் ஹீரோக்களை வைத்து ஹிட் கொடுக்க வேண்டும் நின்று ஆசை போலிருக்கிறது. விஜயிடம் தில்ராஜு மாட்டினார். அஜீத்திடம் மைத்ரி மாட்டியிருக்கிறது.

ஆகமொத்தம் தமிழ் சினிமாவை காப்பாற்றத்தான் ஆளில்லை…

– மகாதேவன் சி

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *