நடிகர் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவர உள்ள “கவுண்டம்பாளையம்” திரைப்படத்தின் தலைப்பை மாற்றக்கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் ரஞ்சித் இயக்கி அவரே நடித்து திரைக்கு வெளி வர உள்ள “கவுண்டம் பாளையம்” திரைப்படத்தின் பெயரை மாற்றக்கோரி, விடுதலை சிறுத்தை கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தென் சென்னை மாவட்ட செயலாளர் கோவிந், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில், “நடிகர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக உள்ள “கவுண்டம்பாளையம்” திரைப்படம் பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும், அரசு ஜாதி பெயரால் தெருக்கள் சாலைகள் இருக்கக் கூடாது எனத் தெரிவித்து இருந்தது, என்றும் வலியுறுத்தி உள்ளார்.
“ஆனால், தற்பொழுது நடிகர் ரஞ்சித் நடித்து வெளியாக உள்ள “கவுண்டம்பாளையம்” ஜாதி பெயரை பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது என்றும், இந்த படம் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும், இபடத்தின் தலைப்பு மாற்றப்பட வேண்டும்” என்றும், அதிரடியாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“இந்த படத்துக்கான விளம்பரங்கள் பத்திரிக்கை மற்றும் போஸ்டராக விளம்பரம் செய்யப்பட்டுள்ள நிலையில், உடனடியாக “கவுண்டம்பாளையம்” என்ற திரைப்படத்தின் பெயரை மாற்றி படத்தை வெளியிட வேண்டும் என்றும், அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், “கவுண்டம்பாளையம்” புதிய பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.