Tue. Jul 1st, 2025

ஜிவி பிரகாஷ் – சைதவி , பரஸ்பரமாக பிரிவதாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் ஆஜர்!

இசையப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைதவி இருவரும், பரஸ்பரமாக பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளனர். 

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ்.

இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.

இப்படி, கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனையால், ஏற்கனவே சில ஆண்டுகளால் இந்த ஜோடி பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.

அத்துடன், இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், இவர்களது விவகாரத்து வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த சூழலில் தான், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இன்று மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவானது, சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு இன்று, விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜிவி பிரகாஷ் – சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்ட பின், இருவரும் ஒரே காரில் ஏறி அங்கிருந்து ஒன்றாக புறப்பட்டு சென்றனர். இச்சம்பவம், பேசும் பொருளாக மாறி உள்ளது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *