பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சிகரமான நாளில் சொந்த பந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்கு ஏற்ப இந்த பதிவில் பொங்கல் வாழ்த்துக்களை (Happy Pongal 2025 Wishes in Tamil) பகிர்ந்துள்ளோம், அவற்றை அனைவருக்கும் பகிர்ந்து மகிழுங்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள் 2025 கவிதைகள்:
1] தை பிறந்தால் வழி பிறக்கும்
எல்லா வலிகளும்
கடந்து போகட்டும்
அனைவர் உள்ளங்களிளும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
அன்பான உறவுகள் அனைவருக்கும்
தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
2] அன்பும் ஆசையும் பொங்க
இன்பமும் இனிமையும் பொங்க
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்
3] இந்த தைத்திருநாளில் நாம் உண்ண
உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும்
உழவர்களுக்கும் வாழ்த்துக்கள்
சூரிய பொங்கல் வாழ்த்துக்கள்
4] அன்பு பொங்க, ஆசைகள் பொங்க
இன்பம் பொங்க, இனிமை பொங்க
என்றும் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்
5] இல்லத்தில் இன்பம் சூழ
உள்ளத்தில் உற்சாகம் பொங்க
வாழ்க்கையில் வளங்கள் வளர
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்