Tue. Jul 1st, 2025

பள்ளி மாணவர்களை தாக்கி ஆபாசமாக திட்டிய தலைமை ஆசிரியர்

“வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில் பணியாற்றும், (பொறுப்பு) தலைமையாசிரியர் மாணவர்களை தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக” கூறி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்.

வாணியம்பாடி அடுத்த தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள புல்லூர் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதி. அங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியராக பணியாற்றும் வெங்கடேசன் என்பவர் பள்ளி மாணவர்களை அடிப்பது, தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், தேர்ச்சி அடைய விடமாட்டேன் என மிரட்டுவதாகவும், மேலும் உயர் அதிகாரிகள் பணிநிறைவு நாளிற்காக மாணவர்களிடையே பலமுறை பணம் பெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனவே, தலைமையாசிரியர் வெங்கடேசனை கண்டித்து, பெற்றோர்கள் அரசு நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்டன.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் முற்றுகைபோரட்டத்தை கைவிட்டு மாணவர்களின் பெற்றோர்கள் அங்கிருந்து சென்றனர்.

மேலும் தலைமையாசிரியர் மீது மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *