Sun. Dec 22nd, 2024

Dhanush Nayanthara Issue: ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு.. நயன்தாராவுக்கு நோட்டீஸ்.. ஹைகோர்ட் அதிரடி!

நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியாக புகார் எழுந்தது.

அனுமதியின்றி பயன்படுத்திய அந்த காட்சிகளை நீக்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ் -க்கு பதிலளித்து அறிக்கை ஒன்றையும் நயன்தாரா வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது.

இதையடுத்து, நயன்தாரா மீது வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த பதில் மனுக்களுக்கு தனுஷ் தரப்பில் இருந்தும் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது வருகின்ற ஜனவரி 8 ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *