Fri. Jun 27th, 2025

Home Remedies for Sleep | நைட்ல படுத்தவுடன் நிம்மதியா தூங்கணுமா? இதோ அருமையான வீட்டு வைத்தியங்கள்..

இன்றைய நவீன காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் உடல்நல பிரச்சனைகளில் தூக்கமின்மையும் ஒன்று. இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பார்ப்பது, மது அருந்துவது, டீ காபி குடிப்பது, குடும்பம் பற்றிய கவலைகள், வேலை பளு, மன அழுத்தம் என பல காரணங்கள் இருக்கின்றன.

இவற்றை எல்லாவும் விட உடல் உழைப்பு இல்லாதது தான் இன்று பலருக்கும் இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். அதனால் நம்மில் பலர் தூக்கம் வர வேண்டும் என்பதற்காக இரவில் மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இருப்பினும், இயற்கையாக தூக்கத்தை வரவழைக்க நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றினாலே இரவில் நிம்மதியாக தூங்கலாம்.

சூடான மாட்டுப் பால்

தூக்கமின்மையை போக்கும் எளிமையான வீட்டு வைத்தியம் இதுதான். வெறுமனே 1 டம்ளர் மாட்டுப் பாலை கொதிக்க வைத்து, இரவு படுக்க செல்வதற்கு முன்பு குடித்து வாருங்கள். சீக்கரமே நல்ல தூக்கம் வரும். அதுமட்டுமல்லாமல், பாலில் உள்ள செரடோனின் என்ற மூலக்கூறு மன அழுத்தத்தை போக்கி, மனதை ரிலாக்ஸ் செய்கிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்திற்கு தூக்கத்தை வரவழைக்கும் தன்மை உண்டு. எனவே, தினமும் தூங்குவதற்கு முன் 1 வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இது தூக்கமின்மையை போக்கி, இயற்கையான தூக்கத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் நீங்கிவிடும்.

ஏலக்காய் பால்

1 கிளாஸ் பாலில், 2-3 ஏலக்காயை தட்டி போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும். பிறகு, அதை வடிக்கட்டி சிறிது நேரம் ஆறவிடவும். ரொம்ப சூடாக இருக்க வேண்டாம். இந்த பாலை இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குடிக்கவும். இதை தொடர்ந்து சில நாட்கள் பின்பற்றி வந்தால் இயற்கையாகவே நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

சீரக தண்ணீர்

சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுப்பதில் பெயர் பெற்றது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு, 2 கிளாஸ் தண்ணீரில், 1 ஸ்பூன் சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து, வடிகட்டாமல் அப்படியே குடித்து வாருங்கள். நிச்சயம் தூக்கமின்மை பிரச்சனையெல்லாம் பறந்துவிடும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *