Mon. Dec 23rd, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது யார்? என்பது குறித்தும், ஸ்கெட்ச் போட்டு கொன்றது எப்படி? என்பது குறித்த முதல்கட்டத் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவர், ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல், கடந்த ஒரு வார காலமாக நோட்டமிட்டு வந்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கிற்ன் தற்போதை நடவடிக்கையானது, அவர் புதிதாக கட்டி வரும் வீட்டருகே அடிக்கடி வருவதையும், குறைந்த அளவிலான நண்பர்களுடன் அங்கு வருவதையும் அவர் நோட்டமிட்டு இருக்கிறார். இதனை, ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலுக்கு உடனுக்குடன் தகவலும் கொடுத்திருக்கிறார்.

அதன் பேரில் தான், நேற்று உணவு டெலிவரி செய்வது போல் நடித்து, முதல் வெட்டாக ஆற்காடு சுரேஷின் மச்சான் அருள் கொடூரமாக வெட்டி உள்ளார்.

அத்துடன், இது குறித்தான விசாரணையில், கடந்த 2000 ஆம் ஆண்டு வட சென்னையை கலக்கி வந்த ரவுடியான நாயுடுவை, ஆற்காடு சுரேஷ் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து பூந்தமல்லியில் வைத்து படுகொலை செய்தனர். ஆனால், நாயுடுவின் வலது கரங்களாக செயல்பட்டு வந்த தென்னரசு ஆம்ஸ்ட்ராங் மற்றும் பாம் சரவணன் ஆகியோர் ஆற்காடு சுரேஷை கொலை செய்ய, பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை என்றும், கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த பிறகு, பல கட்டப்பஞ்சாயத்து, ஆருத்ரா மோசடி விவகாரத்தில் ஆற்காடு சுரேஷ் உடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார் ஆம்ஸ்ட்ராங் என்கிற தகவலும் கிடைத்திருக்கிறது.

ஆற்காடு சுரேஷை கொலை செய்ய தென்னரசு மற்றும் பாம் சரவணனிற்கு ஆம்ஸ்ட்சாங் பண உதவி மற்றும் அடைக்கலம் கொடுத்து வந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னரசையும் ஆற்காடு சுரேஷ் கும்பல் கொலை செய்திருக்கிறது.

இதன் காரணமாக, உடனடியாக ஆற்காடு சுரேஷை தீர்த்துக்கட்ட ஆர்ம்ஸ்ட்ராங் தீவிர ஸ்கெட்ச் போட்ட நிலையில் தான், கூட்டாளி ஒத்தக்கண்ணு ஜெயபால் மூலமாக கூலிப்படையை ஏவி கடந்த ஆண்டு பட்டினபாக்கத்தில் வைத்து ஆற்காடு சுரேஷை கொலை செய்தனர்.

ஆற்காடு சுரேஷை கொலை செய்தது மட்டுமின்றி, அவரது தம்பி புன்னை பாலுவையும் ஆம்ஸ்ட்ராங் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆம்ஸ்ட்ராங்கை அடிக்கடி நோட்டமிட்டு கொலை செய்து இருப்பதும், தற்போதைய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

குறிப்பாக, ஆம்ஸ்ட்ராங்க் இடது கழுத்து மேல் பகுதி, காது, கழுத்து, வலது சுண்டு விரல் ஆகிய இடங்களில் கண்மூடித்தனமாக வெட்டி துண்டாக்கி உள்ளனர். இதனால், அவரது இடது கணுகாலிலும் வெட்டு விழுந்துள்ளது. கையில் நாட்டு வெடிகுண்டுகளையும் எடுத்து வந்து உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கவனத்தை திசைத்திருப்பி, பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தை நோக்கி கொடூரமாக வெட்டி உள்ளனர். அதன் பின்னர், கனுக்காலில் வெட்டி, அவரை நிலைக்குழைய செய்து உள்ளனர். தொடர்ச்சியாக, அவரை வெட்டும் போது இடது விரல் துண்டாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் குத்து சண்டை போட தெரிந்தவர் என்பதால், அவரை எவ்வாறு வெட்டுவது என அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இந்த கொலையை நிகழ்த்தி உள்ளனர். மிக முக்கியமாக, ஆம்ஸ்ட்ராங் மேலும் சுதாகரித்தால் நாட்டு வெடிகுண்டு வீசி அவரை தீர்த்துகட்டவும் திட்டம் தீட்டி உள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *