வயிறு உப்புசம் என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனையாகும். நாம், சாப்பிடும்போது அதிகப்படியான காற்றை விழுங்குவதால், இரைப்பை குடலில் காற்று நிரம்பிவிடும். இதனால் உணவு சாப்பிட்ட பிறகு வயிறு இறுக்கமாகவும் அல்லது வீங்கியிருப்பது போலவும் தோன்றும். சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது, துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, மன அழுத்தம், அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவது, மலச்சிக்கல், வேகமாக சாப்பிடுவது, மாதவிடாய் போன்ற காரணங்களாலே பெரும்பாலும் வயிறு உப்புசத்தை ஏற்படுகின்றன.
இந்த வயிறு உப்புசத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால், மற்ற செரிமானப் பிரச்சனைகளுக்கும், குடல் ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு வழிவகுத்து கொடுத்தும். இருப்பினும், இந்த வயிறு உப்புசத்தை வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தே உடனடியாக நிவாரணம் அளிக்கலாம். தற்போது இந்த பதிவில் வயிறு உப்புசத்தை போக்கும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
இஞ்சி டீ
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்னர், சிறிதளவு இஞ்சியை தோல் நீக்கி, தண்ணீரில் சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.
இப்போது இஞ்சியை தட்டியோ கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வையுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு கொத்தமல்லியும் கூட சேர்த்துக் கொள்ளலாம். வாசனையாக இருக்கும்.
தண்ணீர் 1 டம்ளராக மாறியதும், இறக்கி வடிகட்டிக் கொள்ளுங்கள். இப்போது அரை எலுமிச்சை பழத்தை பிழிஞ்சிவிட்டு, 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து வெதுவெதுப்பாக அருந்தவும்.
பயன்கள்
செரிமான பிரச்சனைகளை போக்குவதில் இஞ்சி பெயர் பெற்றது. இந்த இஞ்சி டியை வயிறு உப்புசத்தின் போது குடிப்பதால், உணவு வெகுவாக ஜீரணம் செய்கிறது. மேலும், வயிற்றில் நிரம்பியிருக்கும் காற்றை திறம்பட வெளியேற்றுகிறது. மேலும், இது இரைப்பை குடல் எரிச்சலையும் தணிக்கும்.
சீரக டீ
ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். பின்னர், 2 ஸ்பூன் சீரகத்தை நசுக்கி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்.
இப்போது, கொதித்த சீரக தண்ணீரை வடிகட்டி அதில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்துவிட்டு, 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து வெதுவெதுப்பாக அருந்தவும்.
பயன்கள்
சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரைப்பை குடல் தசைகளை தளர்த்த உதவும். மேலும், வயிற்றுள்ள வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் வயிறு உப்புசம் வெகுவாக குறையும். வயிற்றில் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதிலும் சீரகம் பெயர் பெற்றது.
மிளகுக்கீரை டீ
ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர், 10 மிளகுக்கீரையை அதில் போட்டு 1 டம்ளராக வரும் வரை கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
பின்னர், அதை வடிகட்டி சுவைக்கு தேன் அல்லது வெல்லம் சேர்த்து கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால், வயிறு உப்புசம் பறந்து போகும்.
பயன்கள்
பார்ப்பதற்கு புதினா போன்ற இருக்கும் இந்த மிளகுக்கீரையில் மெந்தோல் என்ற சேர்மம் உள்ளது. இது செரிமான மண்டலத்தின் தசைகளை தளர்த்துகின்றன. வாயுவை வெளியேற்றுவதோடு, உப்புசத்தையும் வெகுவாக குறைக்கும்.