“திமுகவை நேரடியாக தாக்கி பேசியதற்கு, விஜயை வரவேற்கிறேன்” என்று, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரைக்கு வருகை தந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “இந்தியாவில் ஏனோ தமிழ் ஒழிக்கப்படுகிறது என்ற ஒரு தோற்றத்தை கொண்டு வருகிறார்கள்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “பட்டப்படிப்பு வரை தமிழில் ஒருவர் தேர்வு செய்யப்பட முடியும்” என்றும், குறிப்பிட்டார்.
அத்துடன், “உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் என்றும், எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியில் மருத்துவம், பொறியியல் வந்துவிட்டது என்ற நிலையில், நீங்கள் ஏன் தமிழில் பொறியியல் கல்வியையும், மருத்துவ கல்வியையும் ஏன் கொண்டு வரவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
“தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். நிறுவிய ஒரே ஒரு தமிழ் பல்கலைகழகம் உள்ளது. உங்களை யார் இன்னொரு தமிழ் பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டாம் என்று சொன்னது?” என்றும், தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
“தமிழ், தமிழ் என்று சொல்கிறீர்களே, ஏன் மருத்துவகல்வி, பொறியியல் கல்லூரிகளில் ஏன் தமிழில் கொண்டு வரவில்லை?” என்றும், தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
“தமிழை வளர்ப்பது போற்றுவது பாஜக. தமிழை வளர்ப்பதற்கு பா.ஜ.க உதவி செய்ய வில்லை என சொல்ல முடியாது” என்றும், தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாக கூறினார்.
“நாங்கள் இந்தியை திணிக்கவில்லை என்றும், இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என தான் சொல்கிறோம்” என்றும், புதிய கல்வி கொள்கை குறிதது தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்தார்.
“பொய் சொல்வதிலும், அதை மறைப்பதில் தான் தமிழக முதல்வர் பி.எச்.டி. முடித்து உள்ளார்கள் என்றும், ஆறு மதம் வரை கூட்டணி பற்றி கேள்வியை கேட்காதீர்கள் என பத்திரிக்கையாளருக்கு கோரிக்கை” ஒன்றையும் அவர் வைத்தார்.
குறிப்பாக, “திமுகவை நேரடியாக தாக்கி பேசியதற்கு விஜயை வரவேற்கிறேன்” என்று, விஜயை வாழ்த்தி வரவேற்ற தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்தில் பாஜக கால் பதித்து வருகிறது” என்றும், சூளுரைத்தார்.