Mon. Jun 30th, 2025

“விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்” எதிர்த்து நிற்கும் நடிகர் பவர் ஸ்டார்! மிரட்டல் விடுத்த தவெக..

“விஜய் தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும், நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்” என்று, நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பேசியதால், மதுரையை சேர்ந்த தவெக நிர்வாகி பவர் ஸ்டாரை போனில் மிரட்டியது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

“சினிமா துறையில் உள்ள நாங்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் விஜய்யை தான் தேர்தெடுப்பார்கள். நீங்க வருத்தப்பட வேண்டாம் தம்பி” என்று, தவெக நிர்வாகிக்கு பவர் ஸ்டார் ஆறுதல் கூறி தப்பித்த சுவாரஸ்ய நிகழ்வும் அரங்கேறி இருக்கிறது.

“வருத்தப்படல சார்..! நாங்க ஏன் வருத்தப்படணும்.! இன்னைக்கு கருத்துக்கணிப்பில் 2-வது இடம். களத்துக்கே வரல தளபதி அதுக்குள்ள 2-வது இடம். களத்துக்கு வந்துட்டா? அவர்தான் முதலிடம்” என்று, தவெக நிர்வாகி பவர் ஸ்டாருக்கு பதிலடி கொடுக்கும் விசயமும் அந்த ஆடியோவில் இடம் பெற்று உள்ளது.

அதாவது, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வருகின்ற 2026 தேர்தலுக்காக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. விஜய் அரசியல் வருகைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயைக்கு போட்டியாக யார் போட்டியிடுவார் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து உள்ளது.

இந்த நிலையில், காமெடி நடிகரும் மருத்துவரான பவர்ஸ்டார் சீனிவாசன், “விஜய் தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும், அவருக்கு எதிராக நான் போட்டியிடுவேன்” என்று, சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவர் கூறியதற்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும், அவரது ரசிகர்களுக்கிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து., மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் பிபி.குளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற நிர்வாகி, பவர் ஸ்டார் சீனிவாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பான ஆடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த அடியோவில்,

தவெக: “மதுரையில் இருந்து பேசுறோம் சார்”

பவர் ஸ்டார்: “எங்க இருந்து பேசறீங்க?

தவெக: மதுரை தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பேசுகிறேன் சார்!திரைத்துறையில் உச்ச நட்சத்திர ஒருவர் தமிழக மக்களுக்காக பணியாற்ற வருகிறார். நீங்கள் தான் அவருக்கு சப்போர்ட் பண்ணனும் சார். நீங்களும் திரைத்துறையில் இருக்கிறீங்க”

பவர் ஸ்டார்: “சப்போர்ட் தான் தம்பி”

தவெக: இல்ல சார் நீங்க அவர் எங்க நிக்கிறாரோ எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று சொல்லி பேட்டி கொடுத்து இருக்கீங்க.

பவர் ஸ்டார்: தம்பி அவர் என்னுடைய பல வருட தம்பி… தம்பி.. விடு தம்பி.. அதுனால என்ன தம்பி..

தவெக: திரைதுறையில் இன்றைக்கு உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் என்பதை நான் சொல்ல தேவையில்லை.? தமிழக மக்களுக்காக வருகிறார்.

பவர் ஸ்டார்: மக்களுக்கு சேவை செய்ய வருகிறார் என்பதை நான் வரவேற்கிறேன்.! போட்டி இருந்தால் தான் தம்பி ஜெயிக்க முடியும்.

தவெக: உங்கள மாதிரி திரைத்துறை ஆட்கள் எல்லாம் வரவேற்கணும் சார்.

பவர் ஸ்டார்: திரைதுறையில் இருக்கிற நாங்க இருவரும் போட்டியிட்டால் மக்கள் விஜயை ஏற்றுக்கொள்வார்கள். சரியா தம்பி., நீங்கள் வருத்தப்பட வேண்டாம் தம்பி.

தவெக: வருத்தப்படல சார். நாங்க ஏன் வருத்தப்படணும்.! இன்னைக்கு கருத்துக்கணிப்பில் 2-வது இடம்., களத்துக்கே வரல தளபதி அதுக்குள்ள 2-வது இடம் களத்துக்கு வந்துட்டா அவர்தான் முதலிடம் நாங்க ஏன் வருத்தப்படணும்.

பவர் ஸ்டார்: சொல்றத கேளு தம்பி..! நமக்குள்ள ஏன் இந்த வாக்குவாதம்.? 

தவெக: வாக்குவாதம் இல்ல சார் என்னுடைய தலைவரை பற்றி நீங்க பேசும்போது உங்களை நாங்கள் மரியாதை குறைவா பேசினோமா? தரை குறைவாய் யாரையும் பேசக்கூடாது என எங்கள் தளபதி எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது சார்.

பவர் ஸ்டார்: உங்க தலைவர் எனக்கு தம்பி சரியா.!

என இத்துடன் அந்த உரையாடல் முடிந்தது..!

கட்சி ஆரம்பித்து இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெகவினர், அதற்குள் விஜய்க்கு எதிராக போட்டியிடுவேன் என கூறும் நபர்களை தொடர்பு கொண்டு, மிரட்டும் பாணியில் பேசுவது நகைப்பை உண்டாக்கி வருகிறது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *