இந்த முறை கோப்பை வென்றே தீருவது என்ற முடிவுடன் தான் இந்திய அணி களமிறங்கியிருக்கிறது. ரோகித்தின் திட்டம் ஒன்று தான். ஆரம்ப ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டும். அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஷுப்மான் கில் நாக் அவுட் மேட்சுகளில் ஆடவில்லையே தவிர லீக் மேட்சுகளில் நன்றாக ஆடினார். விராட் கோஹ்லி தான் ஒரு சாம்பியன் பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லா காரணமாக இருந்தவர்கள் இரண்டு பேர் தான் ஒன்று ஸ்ரேயாஸ் ஐயர். மற்றொருவர் வருண். அஷ்வின் சானலிலும் இவர்கள் இருவரைத் தான் சொல்லியிருந்தார். ஸ்ரேயாஸ் களத்திற்கு வந்தாலே பெரும் நம்பிக்கை வந்தது. அந்தளவு தன்னம்பிக்கையுடன் ஆடினார். அவராக அவுட் ஆனால் தான் உண்டு என்ற அளவில் இருந்தது அவரது பேட்டிங். இந்த தொடர் முழுவதுமே அவரே தேவையில்லாத ஷாட் ஆடி அவுட் ஆனாரே தவிர, ரன்கள் சேர்க்க தடுமாறவே இல்லை. நேற்றும் கடைசி வரை ஆடியிருந்தால் மேன் ஆப் தி சீரீஸ் வாங்கிருக்கலாம்.
வருண் சக்கரவர்த்தி உண்மையிலேயே சர்ப்ரைஸ் பேக்கேஜ். எதிரணிகள் அனைத்துமே அவருக்கு எதிராக மிகந்த எச்சரிகையுடன், கவனத்துடன் விளையாடுகின்றன. வருணின் எழுச்சி இந்திய அணிக்கு வரமாக அமைந்திருக்கிறது.
மூன்றாவதாக இன்னொரு நபரை குறிப்பிட வேண்டும் என்றால் அக்சர் படேல் தான். சிக்கனமான பந்து வீச்சாகட்டும், பிரமாதமான பீல்டிங் ஆகட்டும், மிடில் ஆர்டரில் விக்கெட் விழுவதை தடுத்து ரன்கள் சேர்ப்பதாகட்டும் அக்சர் ஒரு தூண் போல செயல்பட்டார். இவற்றை கன்சிஸ்டெண்டாக செய்தார்.
இறுதி ஓவர்களில் ரன்கள் சேர்க்கும் வேலையை பாண்டியா எடுத்துக் கொண்டார். கே எல் ராகுலும் தன் பொறுப்பை உணர்ந்து விளையாடினார்.ஜடேஜாவின் சிக்கனமான பந்து வீச்சும், அவரது பீல்டிங்கும் எப்போதுமே இந்திய அணியின் சொத்து.
பந்து வீச்சைப் பொறுத்தவரை 4 ஸ்பின்னர்களுடன் ஆடியது மாஸ்டர் ஸ்ட்ரோக். வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஸ்பின்னர் தான் விளையாட வேண்டும், ஒரு நாள், டி 20 போட்டிகளில் 2 ஸ்பின்னர்கள் தான் இருக்க வேண்டும் என்ற ஸ்டீரியோடைப் வழக்கத்தை உடைத்துப் போட்டு, 4 உலகத்தர ஸ்பின்னர்களுடன் களமிற்ங்கிய இந்திய அணிக்கும், கோச் காம்பீருக்கும் பாராட்டுகள்.
ரோகித் ஷர்மா கோப்பை வெல்லும் மெஷினாக மாறிக்கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது. அதையும் சரி செய்தால் அனைத்து விதமான போட்டிகளிலும் இந்தியா சாம்பியனாக இருக்கும்.
வாழ்த்துகள் இந்தியா!
– Mahadevan CM