Tue. Jul 1st, 2025

அட கொடுமையே.. கள்ளக் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!  

ஏலகிரி சுற்றுலா தளத்திற்கு வந்த கள்ளக் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சித்த நிலையில், சம்பவ இடத்திலேயே காதலன் உயிரிழந்த நிலையில், காதலி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதி. 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் தற்பொழுது கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேடடை அடுத்த முத்துக்கடை பகுதியைச் சேர்ந்த குமரேசன் மனைவி காமாட்சி என்பவர் தன்னுடைய முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு விலகி பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்கிற நபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சுற்றுலா தளமான ஏலகிரி மலைப்பகுதிக்கு கடந்த தீபாவளி காலகட்டங்களில் இரண்டாவது கள்ளக் காதலன் ஜெயராமனுடன் தங்கி விட்டு சென்ற காமாட்சி, மீண்டும் அதே பகுதிக்கு இன்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இரு வீட்டாருக்கும் இவர்களுடைய தொடர்பு பற்றிய செய்தி தெரியாத நிலையில் காமாட்சியின் அக்கா இவர்களின் உறவு குறித்து கண்டித்ததால் காமாட்சி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜெயராமன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஏலகிரி மலைப்பகுதியில் உள்ள ஒரு தனி நபர் வீட்டில் தங்கி பின்பு எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில், எலி மருந்து குடித்த கள்ளக் காதலன் சம்பவ இடத்திலேயே பலியானதை தொடர்ந்து, தகவல் அறிந்து சென்ற ஏலகிரி காவல் துறை கள்ளக் காதலன் ஜெயராமின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், உயிரோடு இருந்த கள்ளக் காதலி காமாட்சியை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக் காதலன் உயிரிழந்த நிலையில், கள்ளக் காதலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு உயர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உயள்ளது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *