“சாகும் வரை நான் நடிக்க வேண்டும்! இது தான் என்னுடைய ஆசை..” என்று, நடிகர் ராதாரவி பேசி உள்ளார்
“TRAUMA” திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசும் போது, “நீங்க டைரக்ட் பண்ணலையா என்று நிறைய பேர் கேட்டார்கள். நான் டைரக்ட் பண்ணுவேன். ஆனா, கொலை செய்துவிடுவேனோ? என்று பயமாய் இருக்கின்றது. அதாவது, நான் படம் இயக்கி மற்றவர்கள் நடிப்பதை பார்த்தால் கொலை செய்து விடுவேனோ என்று பயமாய் இருக்கின்றது. ஏன்னா, எனக்கு இருக்கும் கோபம் அப்படி. ஒன் மோர் கேட்டா திரும்ப நடிக்க சொல்ல மாட்டேன். அவர்களை தூக்கிட்டு வேற ஒரு நடிகரை வைத்து நடிக்க வைப்பேன்” என்று, open ஆக பேசினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் ராதாரவி, “உண்மையை பேசுவதற்கு எப்போதுமே பயப்படக்கூடாது. பொய்யை சொல்லுவதற்கு தான் பயப்பட வேண்டும். என்னுடைய குறிக்கோள் என்ன? என்று ஒருவர் கேட்டார் அது தான், இப்போ வரைக்கும் சுற்றி சுற்றி தேடிக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு குறிக்கோள் என்று எதுவும் கிடையாது. பெரிய நடிகனாக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏனென்றால், பெரிய நடிகனுக்கு மகனாக பிறந்ததே போதும் நிம்மதியாக இருக்கோம்.
என் தந்தை எம்.ஆர். ராதா பற்றி சில பேர் அவர் 7 பொண்டாட்டி வைத்திருந்தார், என்று கூறுகிறார்கள். அவர் வைத்திருந்தால் உங்களுக்கு என்ன? அவர் ஆம்பள டா அவரை ஏண்டா தொல்லை பண்றீங்க? என்று நான் சொல்லிவிட்டு போயிட்டே இருக்கேன்.
சிலவற்றிற்கு மட்டும் பதில் சொல்ல வேண்டும். சிலவற்றிற்கு பதில் சொல்லக்கூடாது. சிரித்துக் கொண்டே சென்று விட வேண்டும்.
இப்போதெல்லாம் ஒரே திரையரங்கில் 7, 8 ஸ்கிரீன்கள் வர ஆரம்பித்துவிட்டது. இருக்கின்ற தனி திரையரங்கை பாதி இடித்துவிட்டார்கள். முன்பு இருந்த நல்ல நல்ல திரையரங்குகள் இப்போது இல்லை.
தற்போது இருக்கக் கூடிய சூழலில் ஒரு சினிமா எடுப்பது தான் சவால். சாகும் வரை நடிக்க வேண்டும் இது தான் என்னுடைய ஆசை” என்று, நடிகர் ராதாரவி பேசினார்.
அத்துடன், “முன்பு சினிமாவில் நடிப்பதற்கு அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால், இப்பொழுது வெளியிடுவதற்கு அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும் என்று கூறுகிறேன். சந்தோஷப்படுவதற்கு சினிமாக்காரன் தேவை. ஆனால், வாழ்வதற்கு விட மாட்டார்கள். தயவு செய்து சினிமாவை வாழ விடுங்கள். சினிமா வீழ்ந்தால், இங்கு நிறைய பேருக்கு வேலை கிடையாது.
நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு என்று ஒரு படத்தை எடுத்தார். பார்த்திபன் யாருக்கும் புரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ஒரு படத்தை எடுப்பார். ஆனால், புதுமையாக எடுப்பார். அவரிடத்தில் அந்த ஒத்த செருப்பு படத்தை நான் திரையரங்கில் சென்று பார்த்துவிட்டு அவருக்கு தொடர்பு கொண்டு உன்னுடைய படத்தை பார்த்தேன். நன்றாக இருந்தது என்று கூறினேன்” என்று, நடிகர் ராதாரவி பரபரப்பாக பேசினார்.